"நேர்கொண்ட பார்வை அப்டேட்" -இன்னைக்கு தல ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட  பார்வை  திரைப்படத்தின் டப்பிங் பணிகளைத் முடித்துள்ளார் அஜித்.

அஜித் நடித்து முடித்துள்ள 'நேர் கொண்ட பார்வை' திரைப்படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு  வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதை அடுத்து அஜித் மீண்டும் இயக்குனர் ஹெச் வினோத்துக்கே வாய்ப்பு அளித்துள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில் விஸ்வாசம் எனும் மெஹாஹிட் படத்தைக் கொடுத்த அஜித் அடுத்த ஏழு மாதத்தில் நேர்கொண்ட பார்வைப் படத்தை ரிலிஸ் செய்ய இருக்கிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடிப்பில் ஒரே ஆண்டில் இரண்டு படங்கள் வெளியாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகளான டப்பிங் பணிகள் சென்னையில் உள்ள பிரபல ஸ்டுடியோவில் முடிவடைத்துள்ளது . இதில் அஜித் தனது டப்பிங் பணிகளை இரவு நேரங்களில் வந்து பேசிச் சென்றுள்ளார் .

இந்த படத்தில் அஜித்தோடு வித்யா பாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்நிலையில் இந்தப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தனது டிவிட்டரில் அறிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Ajith Nerkonda Paarvai Post production and Trailer update

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H. Vinoth, Nerkonda Paarvai, Nirav shah, Yuvan Shankar Raja will find this news story useful.