FANSக்கு அன்பு முத்தம் கொடுத்த அஜித்..திருச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் AK

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித், திருச்சி ரைபிள் கிளப்பில் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலாகி வருகின்றது.

Advertising
>
Advertising

Also Read | திருச்சியில் நடிகர் அஜித்.. இதுக்கு தான் வந்திருக்காரா? முழு தகவலுடன் வைரல் ஃபோட்டோஸ்!

நேற்று நடிகர் அஜித்குமார் சென்னைக்கு அருகில் உள்ள மொரை வீரபுரம் போலீஸ் பயிற்சி மைய அகாடமியில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டார். அங்குள்ள காவலர்களிடம் அஜித் உரையாடும் வீடியோ  வெளியாகி வைரலானது.

இந்நிலையில் மாநில அளவிலான 47வது துப்பாக்கி சுடும் போட்டி திருச்சி ரைஃபிள் கிளப் சார்பில் திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே. நகர் ஆயுதப்படை ரிசர்வ் கேம்பஸில் நேற்று  (26.07.2022) துவங்கி உள்ளது.

இதற்காக நடிகர் அஜித் குமார் சென்னையில் இருந்து திருச்சி ரைஃபிள் கிளப் சென்றுள்ளார். அங்கு துப்பாக்கி சுடும் போட்டிகளிலும் கலந்து கொண்டார். போட்டிகள் முடிந்ததும் நடிகர் அஜித் குமார்  சென்னை திரும்புவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த துப்பாக்கி சுடும் போட்டிகள் ஜூலை 31 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் போட்டி நடக்கும் இடத்தில் காலை முதலே ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக வர தொடங்கினர்‌. இச்சூழலில் ரைபிள் கிளப் கட்டடத்தின் மேல் ஏறி நடிகர் அஜித் ரசிகர்களை நோக்கி கையசைத்தார்‌. குழுமியிருந்த ரசிகர்களுக்கு இரு கைகளை சேர்த்து முத்தமும் கொடுத்தார்.

அப்போது அங்கு உள்ள டிரான்ஸ்பார்மர் மீது ஏறி நின்ற ரசிகர்களை நோக்கி இறங்கச் சொல்லி சைகை செய்தார். உடனே ரசிகர்கள் அஜித்தின் குறிப்பை உணர்ந்து உடனடியாக மின்மாற்றியை விட்டு கீழே இறங்கினர்.

தொடர்ந்து ஒரு நிமிடம் அஜித் கட்டிடத்தின் மாடியில் நின்று ரசிகர்களுக்கு வணக்கம் வைத்தார். பின்னர் மாடியில் இருந்து கீழே இறங்கி போட்டி நடக்கும் அரங்கினுள் சென்றுவிட்டார்.

இந்த வீடியோக்கள் & புகைப்படங்கள் வெளியாகி உள்ளது

Also Read | திருச்சியில் நடிகர் அஜித்தை சந்தித்த ரசிகர்.. வைரலாகும் நெகிழ்ச்சியான பதிவு!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar with Thousands of Fans at Trichy KK Nagar Rifle Club

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar with Thousands of Fans, AjithKumar With his fans, Trichy KK Nagar Rifle Club will find this news story useful.