நடிகர் அஜித் தனது ரசிகர்களுடன் எடுத்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

Also Read | 'கோலமாவு கோகிலா' இந்தி ரீமேக்.. பட ரிலீசை முன்னிட்டு ஜான்வி கபூர் போட்டோஷூட்! வைரல் போட்டோஸ்!
நடிகர் அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் அஜித் BMW பைக்கை எடுத்துக்கொண்டு ஐரோப்பிய நாடுகளில் கடந்த சில நாட்களாக பயணம் மேற்கொண்டார்.
இந்த பைக் சுற்றுப்பயணம் தொடர்பான புகைப்படங்களை அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் சில புகைப்படங்களை சில நாட்களுக்கு முன் வெளியிட்டார். ஐரோப்பா நாடுகளில் குறிப்பாக பெல்ஜியம், பிரிட்டன், பிரான்ஸ் நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் நடந்தது.
பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் அஜித், தனது மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் மற்றும் குடும்பத்தினருடன் லண்டனில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அஜித் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அதேவேளையில் தமிழகத்தில் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
முன்னதாக AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.
முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூன் 15ஆம் தேதி முதல் சென்னையில் துவங்கி உள்ளது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந்நிலையில் நடிகர் அஜித் விமான நிலையத்தில் புறப்பாடுக்கு முன் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. AK 61 படத்தின் அதே லுக்கில் தாடியுடன் காதில் கடுக்கனுடன் அஜித் காட்சியளிக்கிறார்.
Also Read | அமலாபால் நடிக்கும் புதிய க்ரைம் த்ரில்லர் படம்.. பிரபல OTT-யில் நேரடியாக ரிலீஸா?