மாஸ் காட்டும் விஸ்வாசம் .. சந்தோஷத்தில் திளைக்கும் அஜீத் ரசிகர்கள்! இதான் காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்ணாத்த திரைப்படம் கடந்த வருடமும், விஸ்வாசம் திரைப்படம் தொடர்ச்சியாக முதலிடத்திலும் உள்ளதை குறிப்பிட்டு அஜீத், ரஜினி மற்றும் சிறுத்தை சிவா ரசிகர்கள் நெகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். 

Ajith Kumar Viswasam trending following Annaatthe TRP
Advertising
>
Advertising

ரஜினிகாந்த்தின் அண்ணாத்த

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் குடும்ப பொழுது போக்கு படமாக அமைந்ததால், பெருவாரியான பார்வையாளர்களை கவர்ந்தது. இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, சூரி,  பிரகாஷ ராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Ajith Kumar <a href='//www.behindwoods.com/tamil-movies/viswasam/index.html' title='Viswasam' class='wiki_url' target='_blank'>Viswasam</a> trending following Annaatthe TRP

2021 டி.ஆர்.பி ரேட்டிங்கில் முதலிடம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார். பின்னர் கடந்த ஜனவரி 14ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அண்ணாத்த திரைப்படம் சன் டிவியிலும், சன் நெக்ஸ்ட் மற்றும் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் பிரீமியராக ஒளிபரப்பப்பட்டது.  இந்நிலையில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப் படங்களிலேயே, தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அதிக டிஆர்பி ரேட்டிங்கை அண்ணாத்த படம் பெற்றுள்ளது.

17.37 மில்லியன் பார்வைகள், 21.60 டிவிஆர் ரேட்டிங்

அதன்படி அண்ணாத்த படம் 17.37 மில்லியன் (1.7 கோடி)  பார்வைகளை கடந்து ஒளிபரப்பாகியுள்ளதாக வெளியான தகவலை இப்படத்தின் இசையமைப்பாளர்  டி.இமான் பகிர்ந்துள்ளார். இத்துடன் டிவிஆர் ரேட்டிங்கை பொறுத்தவரை அண்ணாத்த திரைப்படம் 21.60 டிவிஆர் ரேட்டிங்கைப் பெற்றுள்ளது.

விஸ்வாசம் திரைப்படம்

முன்னதாக இந்த டிஆர்பி ரேட்டிங் பட்டியலில் விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் திரைப்படம் சன் டிவியில் ஒளிபரப்பாகி 17.69 மில்லியன் இம்ப்ரஷன்களுடன் முதலிடத்தில் இருந்துவந்தது. அதன் பின்னர் கடந்த 2019ம் ஆண்டு சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் குமார் நடித்த விஸ்வாசம் படம், அந்த ரெக்கார்ட்டை வீழ்த்தி 18.14 மில்லியன் இம்ப்ரஷன்களை பெற்று தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

வாழ்த்தும் ரசிகர்கள்

இதுவரை டி.ஆர்பி ரேட்டிங் பட்டியலில் முதலிடத்தில் சிறுத்தை சிவா இயக்கிய விஸ்வாசம் திரைப்படம் உள்ளதையும், கடந்த வருடத்தின் டி.ஆர்.பியை பொருத்தவரை அண்ணாத்த படம் முதலிடத்தில் இருப்பதாக தற்போது வெளிவந்துள்ள தகவலையும் பகிர்ந்து ரசிகர்கள் இயக்குநர் சிறுத்தை சிவாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: கொலமாஸ் கூட்டணி.. படத்தில் இணைந்த நடிகை! வில்லன் இவரா? VJS, சந்தீப் கிஷனின் Michael..

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Viswasam trending following Annaatthe TRP

People looking for online information on Annaatthe Tamil, AnnaattheTRP, D Imman, Rajinikanth, Siruthai Siva, Viswasam, Viswasam Tamil will find this news story useful.