2002-ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் வில்லன். அஜித் நடிப்பிலான இந்த திரைப்படத்தை கே. எஸ். ரவிக்குமார் இயக்கினார். இத்திரைப்படத்தில் கதாநாயகனாக முன்னணிக் கதாப்பாத்திரத்தில் மீனாவும், நடிகை கிரணும் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ள இத்திரைப்படத்தில் அஜித் குமார் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார்.
அனைத்து தரப்பு பார்வையாளர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்த படத்தில் இரட்டை வேடத்தில் அஜித் நடித்த அந்த கேரக்டர்களின் சிறுவயது கேரக்டர்களாக நடித்த தினேஷ் ஷா மற்றும் நரேஷ் ஷா இருவரும் பிஹைண்ட்வுட்ஸ் தளத்துக்கு பிரத்தியேகமாக பேட்டி அளித்துள்ளனர்.
உண்மையில் இவர்களுள் தினேஷ் ஷா தம்பி. நரேஷ் ஷா அண்ணன். ஆனால் படத்தில் அண்ணன் அஜித்தான சிவா கேரக்டரில் தினேஷ் ஷாவும், தம்பி அஜித்தான விஷ்ணு கேரக்டரில் நரேஷ் ஷாவும் நடித்திருப்பார்கள். இதற்கு காரணம், நரேஷ் ஷா என நினைத்து தினேஷ் ஷாவிடம் டைரக்டர் ரெடியாகிவிட்டு வர சொன்னதுதானாம். இதை ஜாலியாக பகிர்ந்துள்ளார் தினேஷ் ஷா. உண்மையில் தினேஷ் ஷா, தம்பி அஜித்தான விஷ்ணு கேரக்டரில் நடித்திருக்க வேண்டியவர்.
மேலும் பேசியவர்கள் தினேஷ் ஷா அஜித் ரசிகர் என்றும் நரேஷ் ஷா விஜய் ரசிகர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் அந்த நேரத்தில் அஜித்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டதுடன், ஆட்டோகிராஃப் வாங்கியதையும், ஆட்டோகிராஃப் வாங்கும்போது, ‘ஒன்ஸ்மோர்’ என சிரித்துக்கொண்டே கேட்டதையும், அப்போது பெரிய நடுக்கத்துடன் ஆமாம் சார் என்று சொன்னதும் அஜித் இன்னொரு கையெழுத்து போட்டதையும் இந்த இரட்டையர்கள் சுவாரஸ்யமாக பகிர்ந்துள்ளனர்.
மேலும் குறிப்பிட்ட எமோஷனல் காட்சியில் நடிக்கும்போது அழுகை வரவில்லை என்று இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் அடித்ததாகவும், அதன் பின்னரே அழுகை வந்ததாகவும், அனைத்து காட்சிகளும் முடிந்த பின்னர், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் அழைத்து அழுகை வருவதற்காகவே பளார் என்று அறைந்ததாக சொன்னதாகவும் குறிப்பிட்ட இந்த இரட்டையர்கள், அந்த காட்சிகளின் ஆழம் தியேட்டரில் படம் பார்க்கும்போது ஆடியன்ஸ் ரெஸ்பான்ஸை வைத்தே உணர்ந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 20 வருஷத்துக்கு முன் இருந்த நடிகர் அஜித் குமாரை நெருங்கி அருகில் பார்த்த இந்த இரட்டையர்கள் அப்போது இளமையில் அஜித் செம்ம ஹேண்ட்ஸமாக இருந்ததாகவும் அதே பரவசம் மாறாமல் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சுவாரஸ்யமாக இவர்கள் பேசியிருக்கும் பல்வேறு விசயங்களை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.