'வலிமை' படத்தின் ஆந்திரா - தெலுங்கானா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய பெரிய நிறுவனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை படத்தின் தெலுங்கு ரிலீஸ் குறித்து மிரட்டலான தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

'வலிமை' படத்தை தியேட்டர்ல பாக்க போற ரசிகர்களுக்கு வினியோகஸ்தர் ராகுல் கொடுத்த EXCLUSIVE அப்டேட்

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. வலிமை படத்தின் தெலுங்கு பதிப்பு சில நாட்களுக்கு முன் சென்சாராகி உள்ளது.  தமிழ் பதிப்பை விட தெலுங்கில் ஒரு நிமிடம் கூடுதல் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழில் நீக்கியது போல் தெலுங்கில் சில காட்சிகள் நீக்கப்படவில்லை. இதனால் தமிழை விட தெலுங்கில் படம் இன்னும் வீரியமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.

இந்த வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை படத்தின் ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களின் ரிலீஸ் உரிமையை கோபிசந்த் இனாமுரியின் IVY புரொடக்சன்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இதனை டிவிட்டரில் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூரும், ஜி ஸ்டூடியோசும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்தின் ஒட்டு மொத்த வெளிநாட்டு தியேட்டர் வெளியீட்டு உரிமையை யுனைட்டட் இந்தியா  எக்ஸ்போர்ட்டர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வலிமை படத்தின் ஆஸ்திரேலியா,வட அமெரிக்கா, பிரான்ஸ் தியேட்டர் உரிமையை ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. வலிமை படத்தின் நியூசிலாந்து, பிஜி, PNG ஆகிய தீவு நாடுகளின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை சதர்ன் ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய நாட்டு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், சதர்ன் ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம் வழியாக ஆஸ்திரேலியாவில் ரிலீஸ் செய்ய உள்ளது.

'காலா' அஞ்சலி பாட்டீலுக்கு பா.ரஞ்சித் கொடுத்த அடுத்த வாய்ப்பு! மேடையில் நெகிழ்ந்த நடிகை

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai Telugu Rights Sold to gopichand innamuri IVY

People looking for online information on Ajith Kumar, அஜித், வலிமை, Gopichand innamuri, IVY புரொடக்சன்ஸ், Valimai Telugu will find this news story useful.