வலிமை படத்தின் மரண மாஸ் பஸ் ஃபைட் காட்சி! போனி கபூர் வெளியிட்ட புதிய PROMO வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை படத்தின் பஸ் சேசிங் சண்டைக்காட்சி முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

சிக்ஸ் பேக்கில் நடிகை ரகுல் ப்ரித் சிங்! சாப்பிடாமல் ரொம்ப கஷ்டப்பட்டு வச்சிருக்காங்க போல

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை படம் CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.

வலிமை படத்தின் புதிய முன்னோட்டத்தை நேற்று போனிகபூர் வெளியிட்டு இருந்தார். அந்த முன்னோட்டம் 1.5 மில்லியனை கடந்து படு வைரலாகி வருகிறது. பின் நாங்க வேற மாரி பாடலின் ப்ரோமோ வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் படு வைரலானது. இந்நிலையில் இன்று (17.02.2022) புதிய ப்ரோமோ வீடியோவை போனி கபூர் வெளியிட்டுள்ளார். படு மாஸ் காட்சிகளோடு, பஸ் சண்டைக்காட்சியோடு இந்த ப்ரோமோ அமைந்துள்ளது.

வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங் பணிகள் சென்னை ஃபோர் பிரேம்ஸ் சவுண்ட் கம்பெனியில் சில நாட்களுக்கு முன் நடந்தன. இந்த சவுண்ட் மிக்ஸிங்குக்கு தேசிய விருது வென்ற ஆடியோகிராபர் மேடயில் ராதாகிருஷ்ணன் ராஜகிருஷ்ணன் பணிபுரிகிறார்.

வலிமை படத்தின் ஆடியோ 11:1 ஒலி கலவையில் நன்றாக வந்துள்ளதால், படம் பார்க்கும் பார்வையாளர்களுக்கு நல்ல அனுபவத்தை வழங்க திரையரங்க உரிமையாளர்களிடம் வலிமை படத்தின் ஒலி தரத்திற்கு ஏற்றவாறு திரையரங்க ஒலி அமைப்பை மாற்றி வைக்க படக்குழு தமிழக திரையரங்குகளை கேட்டுக்கொண்டுள்ளது.

சிவகார்த்திகேயன் பிறந்தநாளுக்கு DON படக்குழு கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்

வலிமை படத்தின் மரண மாஸ் பஸ் ஃபைட் காட்சி! போனி கபூர் வெளியிட்ட புதிய PROMO வீடியோ வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai New Bus Chasing Scene Promo Released by Boney Kapoor

People looking for online information on Ajith Kumar, அஜித், கார்த்திகேயா, போனிகபூர், வலிமை, Boney kapoor, Bus Chasing Scene, H Vinoth, Valimai will find this news story useful.