அஜித் நடிக்கும் 'வலிமை' படத்தின் டிரெய்லர் எப்போ ரிலீஸ்! வினியோகஸ்தர் கொடுத்த சரவெடி UPDATE!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆற்காடு : நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள வலிமை படத்தின்  டிரெய்லர் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

வலிமை

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.

வலிமையின் சாதனைகள்

வலிமை படத்தின் படப்பிடிப்பு  (01.09.2021) அன்று  நிறைவடைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படக்குழு வலிமை படத்தின் போஸ்டர்களையும், முதல் இரண்டு சிங்கிள் பாடலையும், THEME MUSIC- ஐயும் வெளியிட்டு படத்தின் பிரமோஷனை ஆரம்பித்துள்ளனர். மோஷன் போஸ்டரைத்தொடர்ந்து வெளியான நாங்க வேற மாரி பாடல் தற்போது 38 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இரண்டாவது சிங்கிள் அம்மா பாடல் 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. வலிமை படத்தின் மேக்கிங் வீடியோ 7 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

வலிமை படக்குழு

இந்த படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை டிரெய்லர் ரிலீஸ் 

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. வட, தென் ஆற்காடு ஏரியா உரிமையை ராக்போர்ட் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் முருகானந்தம்  கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் வலிமை படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என எதிர்பார்க்கலாம் என்று ராக்போர்ட் நிறுவனம் டிவிட்டரில் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai Movie Trailer Release Update

People looking for online information on Ajith Kumar, அஜித், அஜித்குமார், திருவள்ளூர் போலிஸ், திலிப் சுப்பராயன், பைக், பைக் சண்டை, யுவன் சங்கர் ராஜா, வலிமை, வலிமை இண்டர்வெல், Bike Stunt, Boney kapoor, H Vinoth, Madurai, Madurai Police, Nirav shah, Valimai, Whistle Theme, Yuvan Shankar Raja will find this news story useful.