உலகப்புகழ் பெற்ற உலகின் மிகப்பெரிய திரையரங்கில் வெளியாகும் 'வலிமை'! செம மாஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

FRANCE PARIS : உலகப்புகழ் பெற்ற உலகின் மிகப்பெரிய திரையரங்கில் Le Grand Rex Theater Paris -ல் வெளியாக உள்ளது.

Advertising
>
Advertising

பிரபல விண்ணைத்தாண்டி வருவாயா, ராஜாராணி பட நடிகர் திடீர் மாரடைப்பால் மரணம்

வலிமை படத்தின் ஆஸ்திரேலியா,வட அமெரிக்கா, பிரான்ஸ் தியேட்டர் உரிமையை ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் ஏற்கனவே கைப்பற்றியது. வலிமை படத்தின் நியூசிலாந்து, பிஜி, PNG ஆகிய தீவு நாடுகளின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை சதர்ன் ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் ஆஸ்திரேலிய நாட்டு வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய ஹம்சினி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம், சதர்ன் ஸ்டார் இண்டர்நேஷனல் நிறுவனம் வழியாக ஆஸ்திறரேலியாவில் ரிலீஸ் செய்ய உள்ளது. அதே போல் ஹம்சினி நிறுவனத்திடம் இருந்து ஃபிரைடே எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தற்போது வலிமை படத்தின் பிரான்ஸ் தியேட்டர் உரிமையை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் உலகின் மிகப்பெரிய திரையரங்கமான Le Grand Rex Theatre Paris -ல் வலிமை படம் திரையிடப்பட உள்ளது. பிப்ரவரி 25,26,28 ஆகிய நாள்களில் வலிமை படம்  Le Grand Rex Theatre Paris -ல் திரையிடப்படுகிறது. இதற்கான டிக்கெட் முன்பதிவு துவங்கி உள்ளது. பிப்ரவரி 25-ல் 2800 இருக்கைகளைக் கொண்ட ஐரோப்பாவின் மிகப்பெரிய திரையில் வலிமை படம் திரையிட உள்ளது பிரான்ஸ் அஜித் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரையரங்கம், 2,702, 500, 262, 210, 155, 125 மற்றும் 100 இருக்கைகள் கொண்ட 7 அரங்குகளும் 35 மிமீ திரையிடல் திரையுடன் டால்பி/டிஜிட்டல் தியேட்டர் சிஸ்டத்தில் டிஜிட்டல் - ஸ்டீரியோபோனிக் ஒலி அமைப்புடன் கூடியது

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்த வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். ராஜ் ஐயப்பா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மதுரை ஜங்சன் & சென்னை மெட்ரோவில் கெத்து காட்டும் 'வலிமை'! வேற லெவல் சம்பவம்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai Movie Releasing at Le grand Rex theater Paris

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, H Vinoth, Le grand Rex theater Paris, Valimai Movie will find this news story useful.