சென்னை : நடிகர் அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வலிமை பொங்கல்
'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் முன்பே அறிவித்தது. வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன. இதுவரை வெளியீட்டு தேதி அறிவிக்கபடாத நிலையிலேயே 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. மதுரை மாவட்டத்தில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து தியேட்டர்களிலும் வலிமை ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
BREAKING: 'வலிமை' படத்துக்கு சென்சார் போர்டு கொடுத்த ரேட்டிங்! பட நீளம் எவ்வளவு?
வலிமை வினியோகஸ்தர்கள்
வலிமை படத்தின் கோயமுத்தூர் உரிமையை கற்பகம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் உரிமையாளரும், மாநாடு படத்தின் தமிழக வினியோகஸ்தருமான SSI Productions சுப்பையா சண்முகம் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். மேலும் வலிமை படத்தின் செங்கல்ப்பட்டு ஏரியா உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆக இருப்பதாக கோபுரம் பிலிம்சால் அறிவிக்கப்பட்டது. இந்த செங்கல்ப்பட்டு ஏரியா தான் தமிழகத்தில் மிகப்பெரிய ஏரியாவாகும். வலிமை படத்தின் செங்கல்பட்டு உரிமையை இடிமுழக்கம், வேலன் படங்களின் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தனது ஸ்கைமேன் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய சாதனை விலைக்கு கைப்பற்றியுள்ளார். வலிமை படத்தின் வட, தென் ஆற்காடு ஏரியா உரிமையை ராக்போர்ட் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் முருகானந்தம் சாதனை விலைக்கு கைப்பற்றியுள்ளார். வலிமை படத்தின் சேலம் ஏரியா உரிமையை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. அதே போல் சென்னை சிட்டி ஏரியாவை வலிமை படத்தின் இணை தயாரிப்பாளர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே சுயமாக வெளியிடுகிறது.
வலிமை South TamilNadu வினியோகஸ்தர்கள்
வலிமை படத்தின் திருநெல்வேலி - கன்னியாகுமரி- தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கிய TK ஏரியா உரிமையை MKRP Productions ராம் பிரசாத் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். அதே போல் திருச்சி ஏரியாவை ஸ்ரீ துர்காம்பிகை பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமே சுயமாக வைத்துள்ளது.
வலிமை ரிலீஸ் தேதி
இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. வலிமை படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டாலும், படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கபடாமலே இருந்தது. இந்நிலையில் நடிகை ஹூமா குரேஷி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வலிமை படத்தின் ரிலீஸ் தேதியாக ஜனவரி 13 என்பதை ரசிகர் ஒருவரின் பதிவை பகிர்ந்து அறிவித்து இருந்தார். இந்நிலையில் இன்று வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தின் ரிலீஸ் தேதியாக 2022 ஜனவரி 13 என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.