திடீரென போனிகபூர் வெளியிட்ட 'வலிமை' படத்தின் புதிய போஸ்டர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'வலிமை' படம் 4 மொழிகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Ajith Kumar Valimai Movie New Telugu Kannada Hindi Posters
Advertising
>
Advertising

ஆர்யா - ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் Hollywood ஸ்டைலில் உருவாகும் புதிய படம்! வைரலாகும் BTS புகைப்படம்

வலிமை படத்தின் இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் டிரெய்லர்கள் இன்று (10.02.2022) ரிலீசாக உள்ளது. அந்த டிரெய்லர்கள் சென்னை மற்றும் மும்பையில் உள்ள சென்சார் போர்டு அலுவலகத்தில் சென்சாராகி உள்ளன. 3.04 நிமிட டிரெய்லர்கள் மூன்றும் சென்சார் போர்டு மூலம் U/A சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தி, தெலுங்கும, கன்னடம் ஆகிய மொழிகளில் மாலை 6.30 மணிக்கு டிரெய்லர் ரிலீசாகிறது.

Ajith Kumar Valimai Movie New Telugu Kannada Hindi Posters

இந்தி டிரெய்லரை அஜய் தேவ்கன், தெலுங்கு டிரெய்லரை மகேஷ் பாபுவும், கன்னட டிரெய்லரை சுதீப்பும் வெளியிடுகின்றனர். இதற்காக புதிய போஸ்டர்களை போனிகபூர் வெளியிட்டுள்ளார். 

வலிமை படத்தின் தமிழ் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டினர்.

சிவகார்த்திகேயன் #SK20 படத்தில் இணைந்த விஜய் பட பிரபலம்! BTS புகைப்படங்களுடன் வெளியான அப்டேட்!

வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்றன.

வலிமை படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

வலிமை படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று கன்னடம், தமிழ், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனை முன்னிட்டு தமிழில் 'வலிமை' படம் சென்சாராகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது.

நடிகை ஹூமா குரேசி வெளியிட்ட பிரத்யேக போஸ்டரில் INDIA's BIGGEST ACTION THRILLER என்று வலிமை போஸ்டரில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai Movie New Telugu Kannada Hindi Posters

People looking for online information on Ajay devgan, Ajith, Ajith Kumar, அஜித் குமார், வலிமை, Mahesh Babu, Sudeep, The Power, Valimai, Valimai The Power will find this news story useful.