வலிமை படத்தின் மலேசியா உரிமம்! கைப்பற்றிய மாஸ்டர் பட வினியோகஸ்தரின் முன்னணி நிறுவனம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது.

Advertising
>
Advertising

சிக்ஸ் ஃபேக்கில் நடிகை திவ்யபாரதி! அசந்து போன ரசிகர்கள்

வலிமை படத்திற்காக திரையரங்குகளை எடுக்கும் பணிகள் ஏற்கனவே படக்குழு மூலம் முழுவீச்சில் துவங்கியுள்ளன.  'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 அன்று வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

வலிமை படத்தின் கோயமுத்தூர் உரிமையை கற்பகம் தியேட்டர் காம்ப்ளக்ஸ் உரிமையாளரும், மாநாடு படத்தின் தமிழக வினியோகஸ்தருமான  SSI  Productions சுப்பையா சண்முகம் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். மேலும் வலிமை படத்தின் செங்கல்ப்பட்டு ஏரியா உரிமை மிகப்பெரிய தொகைக்கு விற்பனை ஆக இருப்பதாக கோபுரம் பிலிம்சால் அறிவிக்கப்பட்டது.

இந்த செங்கல்ப்பட்டு ஏரியா தான் தமிழகத்தில் மிகப்பெரிய ஏரியாவாகும். வலிமை படத்தின் செங்கல்பட்டு உரிமையை இடிமுழக்கம், வேலன் படங்களின் தயாரிப்பாளர் கலைமகன் முபாரக் தனது ஸ்கைமேன் நிறுவனத்தின் மூலம் மிகப்பெரிய சாதனை விலைக்கு கைப்பற்றியுள்ளார்.

வலிமை படத்தின் திருநெல்வேலி - கன்னியாகுமரி- தூத்துக்குடி மாவட்டத்தை உள்ளடக்கிய TK ஏரியா  உரிமையை MKRP  Productions ராம் பிரசாத் மிகப்பெரிய விலைக்கு கைப்பற்றியுள்ளார். வலிமை படத்தின் வட, தென் ஆற்காடு ஏரியா உரிமையை ராக்போர்ட் எண்டெர்டெயிண்மெண்ட் நிறுவனத்தின் முருகானந்தம் சாதனை விலைக்கு கைப்பற்றியுள்ளார்.

வலிமை படத்தின் சேலம் ஏரியா உரிமையை ஸ்ரீ குமரன் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. அதே போல் திருச்சி ஏரியாவை ஸ்ரீ துர்காம்பிகை பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. மேலும் மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமே சுயமாக வைத்துள்ளது. அதே போல் சென்னை சிட்டி ஏரியாவை வலிமை படத்தின் இணை தயாரிப்பாளர் ராகுலின் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனமே சுயமாக வெளியிடுகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் மலேசியா நாட்டு தியேட்டர் வெளியீட்டு உரிமையை லோட்டஸ் ஃபைவ் ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என அந்நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இந்த நிறுவனம் விஜய் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தை வெளிநாட்டில் வினியோகம் செய்த நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. மலேசியா திரையரங்குகள் வலிமை படத்தினை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

சினிமாவில் சிவாவின் 10 ஆண்டுகள் - ”இனிதான் ஆரம்பமே” - அனிருத் அளித்த பாசிடிவ் கமெண்ட்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai Movie Malaysia Theatre Rights

People looking for online information on Ajith Kumar, அஜித்குமார், வலிமை, Booney Kapoor, H. வினோத், H. Vinoth, Malaysia Theatre, Valimai Movie will find this news story useful.