VALIMAI: மதுரை மாவட்டத்தில் சத்தமில்லாமல் செம சம்பவம் செய்த அஜித் நடிக்கும் வலிமை படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மதுரை: வலிமை படம் மதுரை மாவட்டத்தில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.

Advertising
>
Advertising

காஜல் அகர்வால் கர்ப்பமான வயிறுடன் வெளியிட்ட LATEST வைரல் புகைப்படங்கள்! ரசிகர்கள் வாழ்த்து

போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், தல அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது.

படப்பிடிப்பு அனைத்தும் முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. 'வலிமை' படத்தின் தமிழ் பதிப்பு சென்சாரகி, CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 24 அன்று இந்த படம் வெளியாக உள்ளது. வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. மேலும் மதுரை ஏரியாவை மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனமே சுயமாக வைத்துள்ளது. 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக மதுரை பகுதிகளில் தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

வரலாற்றில் முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் உள்ள 27 தியேட்டர்களிலும் வலிமை படம் மட்டுமே திரையிட்ப்பட உள்ளது. இதனை அந்தந்த தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 45 முதல் 50 திரைகள் வரை உள்ள மதுரை மாவட்டத்தில் குறைந்தது 45 திரைகளில் வலிமை படம் வெளியாக உள்ளது.

இந்த படத்திற்கு இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.  கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

BREAKING: BEAST பட அரபிக்குத்து பாட்டுல இந்த விஷயம் இருக்காமா? அப்போ பாட்டு வேற லெவல் தான்!

 

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai Movie Madurai district Full Theatre List

People looking for online information on Ajith Kumar, எச். வினோத், போனி கபூர், வலிமை படம், Boney kapoor, H. Vinoth, Theatre, Valimai Movie will find this news story useful.