செம ட்ரீட்..! ஒரே ஆடியோவில் ஸ்ட்ரீம் ஆகும் ‘வலிமை’ ட்ராக்ஸ் .. END-ல THEME மியூசிக் வேறமாரி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ValimaiAlbum:நடிகர் அஜித் குமார் நடிப்பில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முக்கியமான திரைப்படம் 'வலிமை'.

Advertising
>
Advertising

2022, ஜனவரி 2:- நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு எச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிக்கும் இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். முன்னதாக வலிமை அப்டேட் கேட்டு ரசிகர்கள் தவித்த தவிப்பை அனைவருமே அறிவார்கள்.

அடுத்தடுத்த அப்டேட்கள்

அதன் பின்னர், ஒவ்வொரு அப்டேட்டாக இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாக தொடங்கியதுமே ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். இதனைத்த் தொடர்ந்து ஃபர்ஸ்ட் லுக், அதன் பின்னர், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, மேக்கிங் வீடியோ என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை  மலைக்க வைத்தன. படம் எப்போது வெளியாகும் என ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்தது.

வலிமை - பொங்கல் ரிலீஸ்

அஜித்துடன் ஹூமா குரேஷி, வில்லனாக கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி, பின்னர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. முன்னதாக 'வலிமை' படம் 2022 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி தயாரிப்பாளர் போனி கபூர், 2022 ஜனவரி 13-ஆம் தேதி வலிமை படத்தின் ரிலீஸ் தேதியாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

வரவேற்பைப் பெற்ற சிங்கிள் பாடல்கள்

முன்னதாக யுவன் இசையில் இப்படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகின.  ‘நாங்க வேற மாரி’ என்கிற பாசிடிவான, மோட்டிவேஷனலான முதல் குத்து பாடல் வெளியானது. இந்த பாடலின் வரவேற்பைத் தொடர்ந்து, ‘அம்மா’ பாடல் வெளியாகி மனதை கரைத்தது.

ஒரே ஆல்பம் - Valimai Album

இவற்றுடன் வலிமை திரைப்படத்தின் தீம் மியூசிக்கும் சேர்த்து 3 டிராக்குகளும் தற்போது ஒரே ஆல்பமாக ஜூக் பாக்ஸில் வெளியாகியுள்ளது. சொனி யூடியூப் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் இந்த ஆடியோ தொகுப்பை கேட்பதில் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

Also Read: ஏ.ஆர்.ரஹ்மான் மகளுக்கு நிச்சயதார்த்தம்!..  மாப்பிள்ளை யார் பாருங்க! வெளியான வைரல் Post!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar valimai full album streaming viral video trending

People looking for online information on Ajith Kumar, Ajith Valimai, அஜித் வலிமை பாடல், வலிமை பாடல்கள், Boney kapoor, H Vinoth, Valimai, Valimai Release, Valimai Songs, ValimaiAlbum, ValimaiFullAlbum, ValimaiMakingVideo, ValimaiUpdate, Yuvan Shankar Raja will find this news story useful.