சார்பட்டா பரம்பரை துரைக்கண்ணு வாத்தியாருடன் அஜித்! வைரலாகும் வலிமை படத்தின் BTS புகைப்படம்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: சார்பட்டா பரம்பரை படத்தில் துரைக்கண்ணு வாத்தியாராக நடித்த நடிகர் GM சுந்தர் நடிகர் அஜித்குமாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகிறது.

Advertising
>
Advertising

நடிகர் ஆர்யா நடிப்பில் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் கடந்த ஜூலை 22ம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. இந்த படத்தை பா.இரஞ்சித் தயாரித்து இயக்கினார், முரளி ஜி ஓளிப்பதிவு செய்தார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். இந்த படத்தில் தோன்றிய கபிலன், டான்சிங் ரோஸ், வேம்புலி, மாரியம்மா, லெட்சுமி, ரங்கன் வாத்தியார், துரைக்கண்ணு வாத்தியார், கெவின் டாடி உள்ளிட்ட பல கதாபாத்திரங்களை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் துரைக்கண்னு வாத்தியாராக G M சுந்தர் நடித்திருந்தார். 70 களில் சென்னையில் பிரபலமாக இருந்த சூளைப் பகுதியைச் சேர்ந்த இடியாப்ப நாயகர் பரம்பரைக்கும், ராயபுரம் பகுதியைச் சேர்ந்த சார்பட்டா பரம்பரைக்கும் இடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டிகளே இந்த படத்தின் கதைக்களம்.

'வலிமை' படத்தில் நடிகர் அஜித் பயன்படுத்திய கையுறை.. ஏலத்தில் எடுத்த ரசிகர்!

G M சுந்தர்

இவர் ஏற்கனவே மண்டேலா, காதலும் கடந்து போகும் (திருவிளையாடல் சிவாஜி கணேசன் நடை) , மகாமுனி, சீதகாதி உள்ளிட்ட சமீப படங்களிலும், 80 களில் புன்னகை மன்னன், சத்யா, கடமை கண்ணியம் கட்டுப்பாடு உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தற்போது வலிமை படத்தில் தல அஜித்துடன் நடித்துள்ளார். டிரெய்லரிலும் இவர் தோன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. நடிகர் அஜித்தை சுட்டு வீழ்த்த உத்தரவிடும் அதிகாரியாக வலிமை டிரெய்லரில் தோன்றியிருப்பார். 

BTS

இந்நிலையில் வலிமை படத்தின் படப்பிடிப்பில் நடிகர் அஜித்துடன் இவர் எடுத்துள்ள புகைப்படங்களை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகின்றன. வலிமை படத்தின் வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டி வருகின்றனர்.

வலிமை டிரெய்லர்ல இதை எல்லாம் கவனிச்சீங்களா? நிரவ் ஷா சம்பவம்!

வலிமை படத்தின் டிரெய்லரில் மிக முக்கிய அம்சமாக பைக் சேஸிங் காட்சிகளும் சண்டைக்காட்சிகளும் அமைந்துள்ளது. இந்த சேஸிங் காட்சிகளுடன் வலிமை படத்தின் எடிட்டிங், ஒளிப்பதிவு, பிண்ணனி இசை, உடையமைப்பு, கலை இயக்கமும் பாராட்டை பெற்று வருகிறது. வலிமை படம் வரும் பொங்கலுக்கு ஜனவரி 13,2022 அன்று திரைக்கு வர இருக்கிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Valimai BTS Image Went Viral on Social Media

People looking for online information on Ajith Kumar, BTS, Duraikannu Vaathiyar, G M Sundar, Sarpatta Parambarai, Valimai will find this news story useful.