AJITH, VALIMI : அப்டேட் முதல் ரிலீஸ் வரை.. அஜித் நடிக்கும் வலிமை.. கடந்து வந்த பாதை! நியாபகம் இருக்கா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 23, பிப்ரவரி 2022: அஜித் குமார் நடிப்பில், இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் வலிமை படத்துக்கு யுவன் சங்கர் ராஜா, ஜிப்ரான் இசையமைத்துள்ளனர். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

Advertising
>
Advertising

நடிகர்கள்

வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், முதன்மை பெண் கதாபாத்திரத்தில் ஹூமா குரேஷியும் நடிக்கின்றனர். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.  கலை இயக்குனராக கதிர், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார்கள்.

வலிமை திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகிறது. இந்த நிலையில் வலிமை திரைப்படம் கடந்து வந்த பாதை குறித்து இங்கு சுருக்கமாக காண்போம்.

வலிமை கடந்து வந்த பாதை..

கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அஜித்குமார் நடிக்கும் 60வது படம், அதாவது AK60 என்று இருந்த திரைப்படத்துக்கு வலிமை என்று பெயர் சூட்டப்பட்டு, படத்துக்கு பூஜை நடந்தது. இதனை தொடர்ந்து டிசம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க, அடுத்தடுத்து 2020 பிப்ரவரி மற்றும் நவம்பர் மாதங்களில் நடிகர் அஜித்துக்கு காயம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

வலிமை அப்டேட்

இதனை தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு ஜனவரியில் வலிமை திரைப்படத்துக்கான அப்டேட் கேட்டு திருச்செந்தூர் கோவிலில் ரசிகர்கள் பேனர் பிடித்து பிரபலம் ஆகினர். இந்த விவகாரத்தையும் பிரபலங்களின் பார்வைக்குக் கொண்டு சென்றனர். அதன் பின்னர் 2001-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், அன்றைய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமே வலிமை அப்டேட்டை ரசிகர்கள் கேட்டனர்.

கிரிக்கெட் வீரர் & பிரதமரிடம்..

இப்படி ஒரே ஒரு வலிமை அப்டேட்க்காக நீண்ட நாள் காத்திருந்த ரசிகர்கள், அந்த மாதமே பிரபல கிரிக்கெட் வீரர் மொயீன் அலியிடம், அவர் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருந்தபோதே, மைதானத்தில் பார்வையாளர்கள் இருக்கையில் இருந்தபடி அப்டேட் கேட்டனர். அதன் பின்னரும் சென்னை நேரு ஸ்டேடியத்திற்கு வருகை தந்த பிரதமர் மோடியிடம் ரசிகர்கள் அப்டேட் கேட்டு பதாகை ஏந்தி நின்றதை பரவலாக காண முடிந்தது.

பொறுமையுடன் காத்திருக்கவும்..

ரசிகர்களின் இந்த பேராதரவையும், பேராவலையும், பெரும் எதிர்பார்ப்பையும் புரிந்து கொண்ட நடிகர் அஜித் , பொறுமையுடன் காத்திருக்க வேண்டி அன்புடன் கேட்டுக் கொண்டார். இதனிடையே 2020 மார்ச்சு மாதத்தில் பாஜகவைச் சேர்ந்த வானதி சீனிவாசன், தான் வெற்றிபெற்றால் வலிமை அப்டேட் நிச்சயமாக கிடைக்கும் என்று தொண்டர்களுக்கு ட்விட்டரில் பதிலளித்து இருந்தது வைரல் ஆனது.

மோஷன் போஸ்டர்

அதாவது அரசியல், திரைப்பட பிரபலங்கள் என பலர் மத்தியிலும் வலிமை அப்டேட்க்காக ரசிகர்கள் காத்திருக்கும் விஷயம் பிரபலமாகிவிட்டது. வலிமை அப்டேட் என்கிற ஒன்று கிடைத்தால் ரசிகர்களுக்கு திருவிழா என்கிற நிலை உருவான சமயத்தில் தான் அந்த திருவிழாவும் வந்தது. ஆம், 2001-ஆம் ஆண்டு ஜூலை மாதம் வலிமை திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. ரசிகர்கள் ஆனந்த கண்ணீரில் மகிழ்ந்தனர்.

வலிமை வெளியீடு

இதனைத் தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ‘நாங்க வேற மாதிரி’ என்கிற, வலிமை திரைப்படத்தின் முதல் குத்து பாடல் வெளியானது. அந்த வருட இறுதியில், அதாவது 2021 டிசம்பர் மாதம், வலிமை திரைப்படத்தின் வெளியீடு உறுதி செய்யப்பட்டது. அதன்படி 2022ஆம் ஆண்டு பொங்கல் நேரத்தில் வலிமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் 2022 ஜனவரியில், ஓமைக்ரான் பரவல் புதிதாக தோன்றி, வலிமை திரைப்பட வெளியீட்டின் ஒத்தி வைப்புக்கு காரணமாய் அமைந்து போனதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து,  2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வலிமை திரைப்படம் 2022, பிப்ரவரி 24-ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக தயாரிப்பாளர் போனி கபூரால் அறிவிக்கப்பட்டது.

ரசிகர்கள் உற்சாகம்

இத்தகைய பல அதிரடி பாதைகளை கடந்து திரையரங்குகளில் வெளியாகும் அஜித்தின் வலிமை படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். நீண்ட நாட்கள் கழித்து திரையரங்குகளில் வெளியாகும் பெரும் படமாக வலிமை இருப்பதால்,  ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் ஒரு திரைப்படமாக வலிமை திரைப்படம் இருப்பதால் ரசிகர்கள் மென்மேலும் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: "அது மூட நம்பிக்கை.. எல்லாருக்கும் வொர்க் அவுட் ஆகாது"... வலிமை இயக்குனர் H.வினோத் பேட்டி

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar valimai 24 feb 2022 release recap memories

People looking for online information on Ajith Kumar, Ajithkumar, AK, Boney kapoor, Ghibran, H Vinoth, Valimai, Valimai recap, Valimai Release, Valimai Songs, ValimaiFromFeb24, ValimaiInTheatres, ValimaiUpdate, Valimi music, ValimiFDFS, Yuvan Shankar Raja will find this news story useful.