அமெரிக்காவில் வசூலை குவிக்கும் 'துணிவு'.. பிரீமியர் ஷோ-ல மட்டும் இத்தனை கோடி வசூலா! OFFICIAL

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Advertising
>
Advertising

Also Read | VIDEO: அடுத்தடுத்து இரண்டு ஷோ.. பிரபல தயாரிப்பாளருடன் துணிவு & வாரிசு FDFS பார்த்த நடிகை த்ரிஷா!

பொங்கலை முன்னிட்டு இன்று (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படமான 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்திய நேரப்படி அதிகாலை 1 மணிக்கு இந்த திரைப்படம் வெளியானது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படத்தின் அமெரிக்க ரிலீஸ் உரிமத்தை சரிகம நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் துணிவு படம் அமெரிக்காவில் பிரீமியர் ஷோ வில் மட்டும் இரவு 8:30 மணி நிலவரப்படி இதுவரை 207 இடங்களில் 229,051 அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. விரைவில் 250 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வசூலிக்கும் எனவும் சரிகம நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய ரூபாய் இது மதிப்பில் 2.03 கோடி ரூபாய் ஆகும்.

Also Read | "கிளாசிக் உருவாக்கம்".. துணிவு படம் குறித்து நடிகர் சரத்குமார் போட்ட ட்வீட்.. TRENDING

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Thunivu USA North America Box Office Collection

People looking for online information on Ajith Kumar, Thunivu, Thunivu USA North America Box Office Collection will find this news story useful.