நடிகர் அஜித் நடித்த துணிவு படத்தின் ஐக்கிய ராஜ்யத்தின் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
![Ajith Kumar Thunivu UK Box Office Collection Ajith Kumar Thunivu UK Box Office Collection](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/ajith-kumar-thunivu-uk-box-office-collection-new-home-mob-index.jpeg)
Also Read | Vadivelu : பெரும் சோகம்.! நடிகர் வடிவேலு தாயார் உடல்நலக் குறைவால் மரணம்..!!
நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணைந்த 'துணிவு' படம் பொங்கலை முன்னிட்டு கடந்த (11.01.2023) அன்று திரையரங்குகளில் வெளியானது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் துணிவு படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்துள்ளது.
'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.
நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் துணிவு படம், ஐக்கிய ராஜ்யத்தில் இதுவரை 3 லட்சம் ஐரோவை வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இந்திய ரூபாய் மதிப்பில் 2.63 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த படங்களில் ஐக்கிய ராஜ்யத்தில் அதிக வசூல் செய்த படமாக துணிவு படம் அமைந்துள்ளது. இதனை வினியோகஸ்தர் Boleyn Cinema நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Also Read போடு.! தனுஷ் நடிக்கும் 50-வது படம்.. போஸ்டருடன் வெளியான லேட்டஸ்ட் அப்டேட்..