THUNIVU: போடு வெடிய .. LYCA நிறுவனம் அறிவித்த துணிவு படத்தின் UK & USA ரிலீஸ் தேதி.. !!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் அமெரிக்க & ஐக்கிய ராஜ்ய நாடுகளின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளிவந்தது.

வலிமை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
குறிப்பாக பைக் ஸ்டண்ட் காட்சிகளுக்கும் சென்டிமெண்ட் காட்சிகளுக்கும் பெரும் ரசிகர்கள் கூடினார்கள். வலிமை திரைப்படம் உலகளவில் 200 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வலிமை படத்திற்கு பிறகு அஜித், H. வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்துள்ளார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் பவனி அமீர் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

துணிவு படத்தின் அமெரிக்க USA தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல சரிகம சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே பொன்னியின் செல்வன், கேஜிஎஃப்-2, RRR படங்களை இந்நிறுவனம் வினியோகம் செய்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல் துணிவு படத்தின் ஐக்கிய ராஜ்ய UK நாடுகளின் ரிலீஸ் உரிமத்தை Boleyn Cinema நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் லைக்கா நிறுவனம் துணிவு படத்தின் USA & UK நாடுகளின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி துணிவு திரைப்படம் வரும் ஜனவரி மாதம் 11 ஆம் தேதி அமெரிக்கா & இங்கிலாந்து திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Thunivu Movie UK USA Release Date

People looking for online information on Ajith Kumar, Lyca, Thunivu, Thunivu Release Date, Thunivu Tickets, UK, USA will find this news story useful.