"தில்லா தில்லா தில்லா இது நம்மளோட ஜில்லா".. போடு.. துணிவு திருவிழா ஸ்டார்ட் ஆயிடுச்சு 🔥!!.. THUNIVU

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருப்பவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை (11.01.2023) ரிலீஸ் ஆக உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | "ADK மாமாவும் டைட்டில் வின் பண்ண வாய்ப்பு இருக்கு".. கணிச்சு சொன்ன மைனா!!.. Bigg Boss

ஏற்கனவே இந்த படத்தின் பாடல்கள், ட்ரைலர் உள்ளிட்டவை வெளியாகி மக்கள் மத்தியில் விறுவிறுப்பை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், ரிலீஸ் நாளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிந்துள்ளார்.

துணிவு திரைப்படம் வெளியாக இன்னும் சில மணி நேரம் மட்டுமே மீதம் இருப்பதால், ரசிகர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். அப்படி ஒரு சூழலில், பல இடங்களில் தற்போதே துணிவு பட ரிலீஸை பண்டிகை போல கொண்டாடி வரும் விஷயம், இணையத்தில் Trend ஆகி வருகிறது.

பல இடங்களில் திரைப்பட ரிலீஸ் முன்பாக நிறைய இடங்களில் ஒன்றாக ரசிகர்கள் திரண்டு DJ, ஆட்டம், பாட்டம் என துணிவு படத்தின் பாடல்கள் உள்ளிட்டவற்றுடன் பட ரிலீஸை திருவிழா போல கொண்டாடியும் வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தை கலக்கி வரும் சூழலில், நாளைய தினம் இன்னும் அதிக கொண்டாட்டமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read | "கதவை சாத்துங்கப்பா".. முதல் முறையா ஒண்ணா சேர்ந்து நின்ன ஹவுஸ்மேட்ஸ் 😂.. எதுக்காக தெரியுமா?

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar Thunivu movie release fans start celebration

People looking for online information on Ajith Kumar, Ajith kumar Fans, Thunivu will find this news story useful.