பொங்கலுக்கு ரெடியாகும் 'துணிவு'.. அடுத்தக்கட்ட பணிகளுக்கு களமிறங்கிய இயக்குனர் H. வினோத்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'துணிவு' படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் துவங்கி உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertising
>
Advertising

நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

இந்த படத்தை H. வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, தயாரிப்பாளர் போனி கபூர்  தயாரிக்கிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

 

'துணிவு' படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலின் படப்பிடிப்பு  சென்னை செம்பரம்பாக்கத்தில் உள்ள பிரபல EVP Film City-யில் நடைபெற்றது. இந்த பாடலுக்கு நடன இயக்குனர் கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் H. வினோத் இசையமைப்பாளர் ஜிப்ரானை சந்தித்த புகைப்படம் நேற்று வெளியானது.  இந்நிலையில் 'துணிவு' படத்தின் பிண்ணனி இசைக் கோர்ப்பு பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar THUNIVU Movie Re Recording Work Started Sources

People looking for online information on Ajith Kumar, Ajithkumar, AK, Ghibran, H Vinoth, Thunivu will find this news story useful.