அஜித் நடிக்கும் 'துணிவு'.. முதல் பாட்டுக்கு டான்ஸ் மாஸ்டர் இவர் தானா?.. அதிரடி அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமாரின் அடுத்த திரைப்படமான 'துணிவு', 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி இருந்தது. இந்த படத்தை H. வினோத் இயக்கி இருந்தார். போனி கபூர் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

வலிமை திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களுக்கு பின்னர், நடிகர் அஜித்குமார், இயக்குனர் H.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக துணிவு படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. துணிவு படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசையமைக்கிறார். ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அஜித்துடன் நடிகை மஞ்சு வாரியர், நடிகர் ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர்.

பொங்கல் விருந்தாக துணிவு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், துணிவு படத்தின் முதல் பாடலுக்கு டான்ஸ் மாஸ்டர் யார் என்பது குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, துணிவு படத்தின் முதல் பாடலுக்கு கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதற்கு முன்பு அஜித் குமார் நடித்த நேர்கொண்ட பார்வை, விஸ்வாசம், விவேகம், வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களிலும் டான்ஸ் மாஸ்டர் ஆகவும் கல்யாண் மாஸ்டர் பணிபுரிந்திருந்தார். ஆலுமா டோலுமா, அடிச்சுத் தூக்கு உள்ளிட்ட பல பாடல்கள் அஜித் - கல்யாண் காம்போவில் ஹிட்டாகி உள்ளது.

துணிவு படத்தின் முதல் சிங்கிளும் நவம்பர் மாதம் வெளியாக உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar thunivu movie first song choreographer sources

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, Ghibran, H Vinoth, Kalyan, Thunivu will find this news story useful.