அஜித் -ஐ இயக்கும் 'சூரரைப்போற்று' சுதா கொங்கரா? G.V. பிரகாஷ் குமார் கொடுத்த வேற லெவல் அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: அஜித் - சுதா கொங்கரா இணைவதாக கூறப்படும் படம் பற்றிய தகவலகளை ஜி.வி.பிரகாஷ் குமார் கூறியுள்ளார்.

Advertising
>
Advertising

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் (24.02.2022) அன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி உள்ளது. வலிமை படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இரண்டு முறை  தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன், அருண் விஜய், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன் ஆகியோரும் வலிமை படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக BMS-ல் வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமைக்கு அடுத்து நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

AK 61படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார்.

சில நாட்களுக்கு முன் நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தினர் உடன், தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றனர். மேலும், இந்த புகைப்படங்களில் அஜித், காதில் கடுக்கண் & முகத்தில் நீண்ட தாடியுடன் செம ஸ்மார்ட் லுக்கில் உள்ளார்.

இந்நிலையில் அஜித் - அடுத்ததாக சூரைப்போற்று பட இயக்குனர் சுதா கொங்கரா பிரசாத் உடன் இணைய இருப்பதாக கூறப்படுகிறது. அதனை ரசிகர் ஒருவர் டிவிட்டரில் ஜி.வி.பிரகாசிடம் கேட்க, சுதா - அஜித் படம் நடக்க வாய்ப்பிருப்பதாகவும், அப்படி அந்த படம் எடுத்தால் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றும், அந்த படம் நடக்க வேண்டும் என தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

அஜித் -ஐ இயக்கும் 'சூரரைப்போற்று' சுதா கொங்கரா? G.V. பிரகாஷ் குமார் கொடுத்த வேற லெவல் அப்டேட்! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Sudha Kongara New Movie Update from GV Prakash Kumar

People looking for online information on Ajith, Ajith Kumar, AK, AK 62, AK 63, AK61, G V Prakash, H Vinoth, Soorarai Potru, Sudha Kongara, Valimai will find this news story useful.