வலிமை படம் பார்த்து விக்னேஷ் சிவன் கொடுத்த நீண்ட விமர்சனம்! வைரலாகும் அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை படத்தை பார்த்து டிவிட்டரில் இயக்குனர் விக்னேஷ் சிவன் பாராட்டி உள்ளார்.

Advertising
>
Advertising

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் நேற்று (24.02.2022) திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வலிமை படம் BOOK MY SHOW தளத்தில் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களால் விரும்பப்பட்டுள்ளது.

இதுவரை இந்திய திரைப்படங்களில் அதிக ரசிகர்கள் பார்க்க ஆர்வம் காட்டும் படமாக வலிமை படம் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.வலிமை படத்தில் வில்லனாக கார்த்திகேயாவும், அஜித்திற்கு நண்பியாக ஹூமா குரேஷி, ராஜ் ஐயப்பா நடிக்க, கதிர் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார். சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றியுள்ளார்.

நிரவ் ஷா ISC ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றியுள்ளார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்க, யுவன் சங்கர் ராஜா உடன் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூருடன் இணைந்து ஜி ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது.

வலிமை படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை மிகப்பெரிய விலைக்கு மதுரை அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி உள்ளது. வலிமை படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இரண்டு முறை  தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன் டிவிட்டரில் வலிமை படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளார். அருண் விஜய், வெங்கட் பிரபு ஆகியோரும் டிவிட்டரில் டிவீட் செய்தனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் வலிமை படத்தை பாராட்டி அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், வலிமை படத்தின் ரிசல்ட் என்பது மிகவும் பொறுப்பான திரைப்பட இயக்குனர் மற்றும் ஊக்கமளிக்கும் நடிகரின் உழைப்பின் கலவையின் விளைவு ஆகும். முக்கியமான கருத்தியல்களுடன் முழு பிரம்மாண்டமான திரைப்படத்தை திரையில் கொண்டு வருவதற்கான வாய்ப்பை இயக்குனரும் நடிகரும் பயன்படுத்திக் கொள்கிந்றனர்!

இதுவரை கண்டிராத செயல்! உண்மையான சண்டைக்காட்சிகள், நம்பகத்தன்மை, அசல் தன்மை மற்றும் ஒவ்வொரு ஃபிரேமின் பின்னும் உள்ள அதீத உழைப்பு ஆகியவை ரசிகர்களின் ஆர்வத்தையும் அன்பையும் பறைசாற்றுகின்றன!

சமூக மதிப்புகளைப் பற்றி படம் பேசுகிறது. மறந்து போன பல அடிப்படை பண்புகளை படம் பேசுகிறது! படத்தின் முக்கிய நோக்கம் இது தான் மற்றும் அது வெகுஜன பார்வையாளர்களிடம் நன்றாக போய் சேர்ந்து இருக்கிறது!

மிக அதிக பொறுப்பு மற்றும் அழகியல் உணர்வுடன் ஒரு உயர்தர ஆக்‌ஷன் படத்தை எடுத்ததற்காக வலிமை குழுவிற்கு பாராட்டுக்கள்!! அஜித் சார், எச் வினோத், போனி கபூர் சார், யுவன் சார் மற்றும் ஒட்டுமொத்த வலிமை குழுவிற்கும் பாராட்டுகள்!" என, விக்னேஷ் சிவன் கூறியுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Starring Valimai Movie Vignesh Shivan Review

People looking for online information on Ajith Kumar, Valimai, Valimai Blockbuster, Valimai Report, Valimai Review, Vignesh shivan will find this news story useful.