அஜித் நடிக்கும் வலிமை! தமிழை விட தெலுங்கில் இன்னும் தரமான சம்பவம் இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை படத்தின் தெலுங்கு பதிப்பு குறித்து மிரட்டலான தகவல் வெளியாகியுள்ளது.

Advertising
>
Advertising

நடிகை அதிதி ஷங்கர் எடுத்த புது அவதாரம்! ஆச்சரியத்தில் மீளாத ரசிகர்கள்

'வலிமை' படத்தின் தமிழ் பதிப்பு சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது.

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் போன்ற மாநிலங்களில் உள்ள திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதியில் இருந்து 50% பார்வையாளர்களாக குறைக்கப்பட்டுள்ளது. தமிழக திரையரங்குகளில் 50% இருக்கைக்கு (பார்வையாளர்கள்) மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் மூன்றாவது அலை ஒமிக்ரான் பரவலும் அதிகரித்துள்ளது, இந்த காரணிகள் படத்தின் வசூலை பாதிக்கலாம். இதன் காரணமாக ரிலீஸ் தேதி (13.01.2022) இருந்து ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில் வலிமை படத்தின் தெலுங்கு பதிப்பு சென்சாராகி உள்ளது.  தமிழ் பதிப்பை விட தெலுங்கில் ஒரு நிமிடம் கூடுதல் காட்சி இடம் பெற்றுள்ளது. மேலும் தமிழில் நீக்கியது போல் தெலுங்கில் சில காட்சிகள் நீக்கப்படவில்லை. இதனால் தமிழை விட தெலுங்கில் படம் இன்னும் வீரியமாக அமைந்துள்ளது என கூறப்படுகிறது.

வலிமை படத்தின் கதை இது தான்! பிரிட்டிஷ் அரசின் Censor Board வெளியிட்ட மிரட்டல் தகவல்

 

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar Starring Valimai Movie Telugu Censored Certificate

People looking for online information on Ajith Kumar, வலிமை, Censored Certificate, Valimai Movie, Valimai Movie Telugu will find this news story useful.