THUNIVU: இயக்குனர் H. வினோத் உடன் பிரபல நடிகர்.. 'துணிவு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்! வைரல் ஃபோட்டோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அஜித்குமாரின் 'துணிவு' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | சென்னை ஏர்போர்ட்டில் அஜித்.. ரசிகர்கள் & அதிகாரிகளுடன் ஜாலி பேச்சு! வைரல் வீடியோ

வலிமை படத்துக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு  'துணிவு' என பெயரிடப்பட்டது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத், சென்னை, விசாகப்பட்டினம், பேங்காக் நகர்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இந்த படத்தின்  இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னைக்கு அருகில் உள்ள செம்பரம்பாக்கம் EVP பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் கலந்து கொண்டார்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த  படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். மேலும் பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

இந்நிலையில் துணிவு படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.  பிரபல டிவி நடிகர் கோகுல் நாத், தனது டிவிட்டர் பக்கத்தில் துணிவு படத்தின் டப்பிங் பணிகளை தான் நிறைவு செய்து விட்டதாக அறிவித்துள்ளார். மேலும் டப்பிங் ஸ்டூடியோவில் இயக்குனர் எச். வினோத்துடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

Also Read | Varisu : செம ஸ்டைலான லுக்கில் தளபதி விஜய்... Trend ஆகும் புதிய BTS ஃபோட்டோஸ்..

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Starring Thunivu Movie Dubbing Work Update

People looking for online information on Ajith Kumar, H Vinoth, Thunivu, Thunivu Movie Dubbing Work will find this news story useful.