துணிவு படத்தின் பேங்காக் ஷூட்டிங்.. சக நடிகர்களுடன் செல்ஃபி எடுத்த அஜித்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'துணிவு' படத்தின் பேங்காக் படப்பிடிப்பில் நடிகர் அஜித் குமார் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

சமீபத்தில் அஜித் குமார் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படத்திற்கு தற்போது துணிவு என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

இந்த படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

ஐத்ராபாத்,  சென்னை & விசாகப்பட்டினத்தில் இந்த துணிவு படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தின் தற்போதைய இறுதிக்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் துவங்கி உள்ளது.

பிக்பாஸ் பிரபலங்களான பவனி & அமீர் இருவரும் துணிவு படத்தில் நடிக்கின்றனர்.  இந்நிலையில் பேங்காக் படப்பிடிப்பில் நடிகர் அஜித், பிக்பாஸ் பிரபலம் அமீர், பாவனி உடன் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்களை அமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Selfie with Co Actors in Thunivu Bangkok Shooting

People looking for online information on Ajith Kumar, AK, Bangkok, Thunivu will find this news story useful.