THUNIVU : "இந்தா வந்துருச்சுல".. அஜித் நடிக்கும் துணிவு படத்தின் முதல் சிங்கிள் அப்டேட்.. !!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமார் நடிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் துணிவு படத்தின் முதல் சிங்கிள் குறித்து அதிகாரபூர்வ அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு  நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் ஆகியோர், மூன்றாவது முறையாக துணிவு படத்தின் மூலம் இணைந்துள்ளனர். H வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

ஹைதராபாத், சென்னை, விசாகப்பட்டினம், உள்ளிட்ட பல இடங்களில் துணிவு படத்தின் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இவர்களுடன் ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். துணிவு படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌. இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு திரைப்படம், 2023 ஆம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஒரு சில போஸ்டர்களும் அவ்வப்போது வெளியான வண்ணம் இருந்தது. அப்படி ஒரு சூழலில், திரைப்படத்தின் அடுத்த அப்டேட்களையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து வருகின்றனர்.

இந்த நிலையில், துணிவு படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என்பது குறித்து அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகி உள்ளது.

துணிவு படத்தின் முதல் சிங்கிள் குறித்த அப்டேட் பற்றி பலரும் சோஷியல் மீடியாவில் கருத்து தெரிவித்து வந்தனர். அப்படி இருக்கையில், ஜிப்ரான் இசையில் உருவாகி உள்ள Chilla Chilla பாடல், டிசம்பர் 9 ஆம் தேதியன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் அஜித் குமாரின் புதிய போஸ்டர் ஒன்றுடன் இதனை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

துணிவு படத்தின் ரிலீஸ் நாளை ரசிகர்கள் எதிர்நோக்கி வரும் நிலையில், தற்போது வெளியாகி உள்ள முதல் சிங்கிள் அப்டேட், அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar next thunivu movie first single update

People looking for online information on Ajith Kumar, Chilla Chilla, Ghibran, H Vinoth, Thunivu will find this news story useful.