THUNIVU : அஜித்தின் துணிவு.. ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போ..? தெறிக்கவிடும் அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித் குமாரின் அடுத்த திரைப்படமான் துணிவு 2023 ஆம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertising
>
Advertising

இதனிடையே, துணிவு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து, நடிகர் அஜித்குமார், இயக்குனர் H. வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனிகபூர் ஆகியோர் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் 'துணிவு'.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதம் சென்னையில் துவங்கியது. சென்னையில் உள்ள காசிமேடு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள காரப்பாக்கம், வண்டலூர் அருகிலுள்ள மண்ணிவாக்கம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது. பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் அரக்கு பள்ளத்தாக்கில் நடந்து முடிந்தது. நான்காம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகரில் நடைபெற்றது. இந்த படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார். பிக்பாஸ் பிரபலம் அமீர் & பாவனி இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

துணிவு படத்தின் ஒளிப்பதிவை நிரவ் ஷா மேற்கொள்ள, கலை இயக்குனராக மிலன் பணிபுரிகிறார். இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார்.

இந்த நிலையில், துணிவு படத்தின் முதல் சிங்கிள் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி, நவம்பர் மாதம் துணிவு படத்தின் முதல் சிங்கிள் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக துணிவு திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், திரைப்படம் தொடர்பான அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar next thunivu movie first single sources

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, First Single, H Vinoth, Pongal 2023, Thunivu will find this news story useful.