#AK62: நடிகர் அஜித் உடன் இணைந்த விக்னேஷ் சிவன்! FAN BOY சம்பவம்னா எப்படி இருக்கும்னு பாக்க போறீங்க

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Advertising
>
Advertising

நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் அறிக்கை மூலம் அறிவித்துள்ளது. 

அந்த அறிக்கையில் "திரு.அஜித் குமார் நடிப்பில் திரு.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் எங்களின் அடுத்த திரைப்படம் "AK 62", திரு.அனிருத் இசையமைக்க, திரு.சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் எங்களின் அடுத்த படத்தை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும். மற்ற நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும்.

திரு.அஜித் குமாருடன் கைகோர்த்ததில் லைக்கா மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது. ஒரு குழுவாக, பார்வையாளர்களுக்கும் ரசிகர்களுக்கும் தரமான திரைப்படங்களை வழங்க லைக்கா நேர்மையான மற்றும் பயனுள்ள ஒத்துழைப்பை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது." என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைசியாக அஜித் நடிப்பில் வலிமை படம் கடந்த மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது.

வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் முதல் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Next Movie AK62 official Lyca Vignesh Shivan

People looking for online information on Ajith Kumar, AK62, Lyca, Vignesh shivan will find this news story useful.