துணிவு படத்தில் இடம்பெற்ற மங்காத்தா REFERENCES.. ரசிகர்கள் மத்தியில் டிரெண்டாகும் காட்சிகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Advertising
>
Advertising

Also Read | முதல்நாளிலேயே 2 தடவை 'துணிவு' படம் பார்த்த 'சர்தார்' இயக்குனர்.. என்ன சொலலிருக்காருனு பாருங்க!  

பொங்கலை முன்னிட்டு நேற்று (11.01.2023)  துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படமான 'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. உலகம் முழுவதும் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை 1 மணிக்கு இந்த திரைப்படம் வெளியானது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார்,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.

நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் துணிவு படத்தில் அஜித் நடித்த மங்காத்தா படத்தினை நினைவுபடுத்தும் வகையில் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக துணிவு படத்தின் துவக்க காட்சியில் "கஷ்டப்பட்டு ப்ளான் பண்ணி, 500 கோடி அடிக்கலாம்னு வந்தோம்.
நீங்க உள்ள வந்துட்டீங்க" என்ற வசனம் துணிவு படத்தில் இடம் பெற்றுள்ளது.  இந்த வசனம் மங்காத்தா படத்தினை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. மங்காத்தா படத்தில் கொள்ளையடிக்கப்பட்ட சூதாட்ட பணத்தின் மதிப்பும் 500 கோடி தான். அதற்காக திட்டத்தில் இறுதியாக அஜித் குமாரின் கதாபாத்திரம் விநாயக் மகாதேவ் வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் துணிவு படத்தின் ஒரு காட்சியில் சுவரின் பின் அஜித் மறைந்து இருக்கும் போது தனது கூலிங் கிளாஸை கழட்டுவார். அப்போது அவருக்கு இணையாக புல்லட்கள் செல்லும். இந்த காட்சி மங்காத்தா படத்தில் உள்ள Bad Man சண்டை காட்சியை நினைவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read | "நன்றி தலைவா".. ரஜினியுடன் பேசி செல்ஃபி வீடியோ எடுத்த ரசிகர்.. தலைவர் வேற லெவல்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Mankatha Reference in Thunivu Movie

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Mankatha Reference, Thunivu will find this news story useful.