கொலமாஸ்.. தீனா, வேதாளம்-ஐ தொடர்ந்து கடுக்கணுடன் வர்றாரு அஜித்.. VINTAGE FEEL-க்கு போன AK FANS

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: விண்டேஜ் கெட்டப்பில் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

Advertising
>
Advertising

இயக்குனர் H. வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் (24.02.2022) அன்று திரையரங்கில் வெளியாகி உள்ளது.  தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசாகி உள்ளது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 607 திரையரங்குகளில் வலிமை படம் ரிலீசாகி உள்ளது. வலிமை படத்தை சினிமா பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இரண்டு முறை  தேசிய விருது வென்ற தயாரிப்பாளர் BOFTA தனஞ்செயன், அருண் விஜய், வெங்கட் பிரபு, விக்னேஷ் சிவன் ஆகியோரும் வலிமை படத்தை பார்த்து கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் அஜித் குமார் தனது குடும்பத்தினர் உடன், தனது மகன் ஆத்விக்கின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றனர். மேலும், இந்த புகைப்படங்களில் அஜித், காதில் கடுக்கண் & முகத்தில் நீண்ட தாடியுடன் செம ஸ்மார்ட் லுக்கில் உள்ளார். 

ஏற்கனவே அஜித், தான் நடித்த தீனா, அசல், வேதாளம் படங்களில் கடுக்கனுடன் தோன்றியுள்ளார்.அதனால் AK61 படத்திலும் VINTAGE LOOK-ல் அஜித் தோன்றுவதால் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர். தீனா, வேதாளம் (கணேஷ்) படத்தில் ரவுடியாகவும், அசல் (சிவா - ஜீவானந்தம்) படத்தில் தொழில் அதிபராகவும் அஜித் கடுக்கனுடன் நடித்திருப்பார்.

வலிமைக்கு அடுத்து நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் 9 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது என்று நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன.

AK 61படத்தின் முதல் லுக் உடன் போனிகபூர் டிவிட்டரில் சில நாட்களுக்கு முன் போட்டோவை பகிர்ந்துள்ளார். அதில் கருப்பு வெள்ளையில் இருள் சூழ தாடியுடன் , காதில் கடுக்கனுடன் நடிகர் அஜித் புகைப்படம் இடம் பெற்றது. AK61 படத்திற்கான முன் தயாரிப்பு என போனி கபூர் அறிவித்து இருந்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Latest Vintage Stud Getup after Dheena Vedalam

People looking for online information on Ajith Kumar, AK, AK61, Dheena, Valimai, Vedalam, Vintage will find this news story useful.