AJITHKUMAR: இந்த VINTAGE அஜித் குரலை கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு.. மனுசன் வேறலெவல்ல மாஸ் FUN பன்றாரு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித், தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

ajith kumar latest video with fans at himalayas
Advertising
>
Advertising

சில நாட்களுக்கு முன் இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் அஜித்  பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

பின்னர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக்,லே & கார்கில் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பின்னர் நடிகர் அஜித், உத்தரகண்ட் மாநிலத்தின் இமயமலையில் அமைந்துள்ள கேதர்நாத் & பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.  கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன.

கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அஜித் இந்தியா முழுவதும் பயணம் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நடிகர் அஜித்தை இமயமலையில் கோயம்புத்தூரை சார்ந்த ரசிகர்கள் சந்தித்துள்ளனர்.

அப்போது ரசிகர்கள், "உங்களை காண 3 நாட்களாக தேடிட்டு இருந்தோம்" என கூற.. இதற்கு பதில் அளித்த நடிகர் அஜித், தேடிட்டு இருந்தீங்களா?  நான் என்ன கொலைகாரனா?  இல்லை கொள்ளைக்காரனா?" என ஜாலியாக பதில் அளித்துள்ளார். 

நடிகர் அஜித்தின் குரல் வின்டேஜ் ஸ்டைலில் காதல் மன்னன், வாலி, முகவரி படங்களில் இருப்பது போல இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

AJITHKUMAR: இந்த VINTAGE அஜித் குரலை கேட்டு எவ்வளவு நாள் ஆச்சு.. மனுசன் வேறலெவல்ல மாஸ் FUN பன்றாரு! வீடியோ

Tags : Ajith Kumar, AK

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar latest video with fans at himalayas

People looking for online information on Ajith Kumar, AK will find this news story useful.