அஜித் குமார் - ஷாலினி ஆகியோர் எடுத்துக் கொண்ட கலர்ஃபுல் ரொமான்டிக் புகைப்படம் தான், தற்போது இணையத்தில் அதிகம் லைக்குகளை அள்ளி வருகிறது.
"உங்கள பாக்கணும்ன்னு வந்தா.." 'ஜெய்பீம்' சிறுமி வெளியிட்ட வீடியோ.. கண்ணு எல்லாம் கலங்கிருச்சு
நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் 'வலிமை'. போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படம், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக, ஹெச். வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அஜித் குமார். வலிமைக்கு முன்பாக, 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தில் ஹெச். வினோத் - அஜித் குமார் ஆகியோர் இணைந்திருந்தனர்.
அது மட்டுமில்லாமல், நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய திரைப்படங்களை தயாரித்த போனி கபூர் தான், ஹெச். வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது படத்தையும் தயாரிக்கவுள்ளார்.
புதிய கூட்டணி
இதற்கான படப்பிடிப்பு, விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இன்னொரு பக்கம், வினோத்தின் படம் கூட ஆரம்பிக்கப்படாத நிலையில், அஜித் குமார் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கவுள்ள அஜித் குமாரின் படத்திற்கு, அனிருத் இசையமைக்கவுள்ளார்.
ஒரே ஒரு ஃபோட்டோ தான்
இந்த புதிய கூட்டணி குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகம் உருவாகியுள்ளது. இந்நிலையில், அஜித் குமாரின் படங்கள் குறித்த அனைத்து அப்டேட்டுகளை விட, ஒரே ஒரு ஃபோட்டோ தான், ஒட்டுமொத்த ரசிகர்களையும் பயங்கரமாக கட்டிப் போட்டுள்ளது.
வெள்ளைத் தாடியுடன் அஜித்
கடந்த சில தினங்களுக்கு முன்பாக, அஜித் குமார் - ஷாலினி தம்பதியினரின் மகன் ஆத்விக் பிறந்தநாள் விழா நடைபெற்றிருந்தது. இதில், அவர்களின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, முழுக்க முழுக்க வெள்ளைத் தாடியுடன் இருக்கும் அஜித் குமாரின் லுக், அதிகம் வைரலாகி இருந்தது.
ரொமான்டிக் ஜோடி
அந்த வகையில், ஷாலினியின் தங்கையும் நடிகையுமான ஷாமிலி, '23 years of togetherness' என்ற கேப்ஷனுடன் அஜித் குமார் மற்றும் ஷாலினி ஆகியோர் ரொமான்டிக்காக இருக்கும் கலர்ஃபுல் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது முதல், ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் வேகமாக வைரலாகி வருகிறது.
கடந்த 23 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட அஜித் குமார் மற்றும் ஷாலினி தம்பதியினருக்கு, அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். மேலும், திருமணத்திற்கு முன்பாக, அமர்க்களம் படத்தில் ஒன்றாகவும் நடித்திருந்தனர். அந்த படத்தில் இருந்தது போல, தற்போதும் அவ்வளவு ரொமான்டிக்காக இருவரும் இருக்கும் புகைப்படம், நெட்டிசன்களின் ஃபேவரைட் லிஸ்ட்டில் இடம்பிடித்துள்ளது.
BB Ultimate: கண்ணீருடன் வெளியேறிய அனிதா.. "உன் Fans-தான் எல்லாத்துக்கும் காரணம்.." யார சொல்றாங்க?