VALIMAI: அஜித் குமார் - H. வினோத் திடீர் சந்திப்பு.. புதிய கெட்டப்பில் வைரலாகும் LATEST புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: வலிமை படத்தின் இயக்குனர் H வினோத்தை நடிகர் அஜித் சந்தித்துள்ள புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Ajith Kumar H Vinoth Recent Meeting Photo at Valimai Movie Mix
Advertising
>
Advertising

வலிமை படம் 2022 பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசாகும் என புதிய போஸ்டர் மூலம் தயாரிப்பாளர் போனிகபூர் சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 'வலிமை' படத்தை திரையிட தியேட்டர் உரிமையாளர்கள் மத்தியில் பலத்த போட்டி நிலவுகிறது. குறிப்பாக மதுரை பகுதிகளில் தியேட்டர்கள் தற்போதே வலிமை படத்தை திரையிடும் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

வரலாற்றில் முதல் முறையாக மதுரை மாவட்டத்தில் உள்ள 27 தியேட்டர்களிலும் வலிமை படம் மட்டுமே திரையிட்ப்பட உள்ளது. இதனை அந்தந்த தியேட்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. கிட்டத்தட்ட 45 முதல் 50 திரைகள் வரை உள்ள மதுரை மாவட்டத்தில் குறைந்தது 45 திரைகளில் வலிமை படம் வெளியாக உள்ளது.

Ajith Kumar H Vinoth Recent Meeting Photo at Valimai Movie Mix

மேலும் வலிமை படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இதில் தமிழ் மொழி டிரெய்லர் முன்னரே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. வெளியானது முதலே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சினிமாத் துறையில் உள்ள பலர், குறிப்பாக தமிழ் சினிமா அல்லாத தெலுங்கு இந்தி சினிமாவின் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் வலிமை படத்தின் டிரெய்லரை பாராட்டினர்.

நேற்று இந்தி டிரெய்லரை இந்தி சூப்பர் ஸ்டார் அஜய் தேவ்கனும், தெலுங்கு டிரெய்லரை தெலுங்கு சூப்பர்ஸ்டார் மகேஷ் பாபுவும், கன்னட டிரெய்லரை கன்னட சூப்பர் ஸ்டார் கிச்சா சுதீப்பும் வெளியிட்டனர். அனைத்து மொழிகளிலும் டிரெய்லர் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

இந்நிலையில் இயக்குனர் எச். வினோத் மற்றும் அஜித், வலிமை படத்தின் சவுண்ட் மிக்ஸிங்கின் போது சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அஜித் மற்றும் வினோத் உடன் ஆடியோக்ராபர் ராஜா கிருஷ்ணன் உள்ளார். அஜித், இந்த புகைப்படத்தில் நீண்ட தாடியுடன் சால்ட் & பெப்பர் லுக்கில் காட்சியளிக்கிறார். 

வலிமை படத்திற்கு இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar H Vinoth Recent Meeting Photo at Valimai Movie Mix

People looking for online information on Ajith Kumar, AK61, வலிமை, H Vinoth, Valimai, Valimai FDFS will find this news story useful.