சென்னை: நடிகர் அஜித் - எச் வினோத் இணையும் புதிய படத்தின் அப்டேட் கிடைத்துள்ளது.
போனி கபூர் தயாரிப்பில், இயக்குனர் எச். வினோத் (H. Vinoth) இயக்கத்தில், நிரவ் ஷா ISC ஒளிப்பதிவில், யுவன் சங்கர் ராஜா (Yuvan Shankar Raja) இசையில், அஜித் (Ajith Kumar) நடிப்பில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றது. NKP படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் அதே கூட்டணி வலிமை படத்தில் இணைந்தது. 'வலிமை' படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வருவதாக படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. கொரோனா காரணமாக ஞாயிறு ஊரடங்கு நடைமுறையில் இருப்பதாலும், திரையரங்கில் 50% ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி அளிப்பதால் படத்தின் வெளியீடு பொங்கலில் இருந்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன் 'வலிமை' படம் சென்சாரகியது. CBFC சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது. மேலும் இந்த படம் 178 (2:58) மணி நிமிடங்கள் ஓடும் எனவும் அறிவிக்கப்பட்டது. பெற்றோர்களின் மேற்பார்வையில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களும் இந்த வலிமை படத்தை பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன் இந்த படத்தின் முன்னோட்டம் வெளியானது. இந்த படத்திற்கு கதிர் கலை இயக்குனராக பணியாற்றுகிறார். அனு வர்தன் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார், சண்டைக்காட்சி இயக்குனராக திலிப் சுப்பராயன் பணியாற்றுகிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, விஜய் வேலுக்குட்டி எடிட்டராக பணியாற்றுகிறார். இயக்குனர் எச். வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஆஸ்கார் விருது தகுதி பட்டியலில் ஜெய்பீம்.. 2 இந்திய படங்களில் ஒன்று.. ஜெயிச்சிடு மாறா!
முத்தக்காட்சிகளால் பரபரப்பை கிளப்பிய தீபிகா படுகோனே! புதிய படத்தின் ரொமாண்டிக் டிரெய்லர்!
இந்நிலையில் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்க உள்ளது பற்றிய மிக முக்கிய அப்டேட் பிரத்யேகமாக Behindwoods தளத்திற்கு கிடைத்துள்ளது. AK61 படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது என்றும் அதற்காக படத்தில் நடிக்கும் நடிகை, நடிகர்களை இறுதிச்செய்யும் பணியில் இருப்பதாக நம்பந்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தில் பணிபுரியும் படக்குழு மற்றும் படம் பற்றிய அறிவிப்பு இன்னும் சில தினங்களில் அதிகாரப்பூர்வமாக வெளியாகலாம்.