பிரபல இளம் நடிகருக்கு அஜித் கொடுத்த பரிசு.. நெகிழ்ந்து போய் ட்வீட் செய்த நடிகர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித் குமார்.

Advertising
>
Advertising

Also Read | "என்னை மன்னிச்சுக்கோங்க".. வெளியேறிய பின் ஜனனி பகிர்ந்த உருக்கமான பதிவு!!.. bigg boss 6 tamil

தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்திற்க்கென்று தனிப்பட்ட ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் நடிகர் அஜித் வலிமை படத்தில் நடித்திருந்தார்.

வலிமை படத்திற்கு பிறகு அஜித், துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார். துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று இந்த படத்தின் காசேதான் கடவுளடா பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

இந்நிலையில் பிரபல இளம் நடிகர் சிபி தனது டிவிட்டர் பக்கத்தில், "நடிகர் அஜித் தனக்கு என்றும் நினைவில் வைத்திருக்க கூடிய பரிசாக ஒரு கூலிங் கிளாஸை பரிசளித்துள்ளார்" என கூறியுள்ளார்.

சிபி புவன சந்திரன், தற்போது துணிவு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவராக நடித்திருந்தார்.

Also Read | FIFA: இந்த வருசத்தோட மிகவும் மகிழ்ச்சியான நாள்.. தனுஷ் வைரல் ட்வீட்!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Gifted Coolers to Thunivu Actor Cibi Bhuvi Chandran

People looking for online information on Ajith Kumar, Cibi Bhuvi Chandran, Thunivu will find this news story useful.