தனது பிறந்தநாளில் 'துணிவு' படக்குழுவுக்கு நடிகர் அஜித் கொடுத்த கிஃப்ட்! பிரபல நடிகர் EXCLUSIVE

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.

Advertising
>
Advertising

இந்த படத்தின் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. வரும் 2023 பொங்கலுக்கு துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ‌

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.

துணிவு படத்தின் டப்பிங் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
நடிகர்கள் ஜி.எம். சுந்தர், ஜான் கொக்கன், மஞ்சு வாரியர், அமீர் மற்றும் பிரேம் குமார் ஆகியோர் ஏற்கனவே டப்பிங் பணிகளை நிறைவு செய்து விட்டதாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் 'துணிவு' படத்தின் நடிகர் மோனிஷ், நமது பிஹைண்ட்வுட்ஸ் சேனலுக்கு பிரத்யேகமான பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் துணிவு படம் குறித்தும், நடிகர் அஜித் குறித்தும் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

நடிகர் அஜித்குமார் குறித்த கேள்விக்கு பதில் அளித்த மோனிஷ், "நடிகர் அஜித்தின் பிறந்தநாள் அன்று துணிவு படத்தின் படப்பிடிப்பு நடந்தது. அப்போது படப்பிடிப்பில் பணிபுரிந்த 150 நபர்களுக்கும் விலையுயர்ந்த மிகப்பெரிய பிஸ்கட்களை வழங்கினார்" என்று மோனிஷ் கூறியுள்ளார். கடந்த மே 1 ஆம் தேதி நடிகர் அஜித் தனது 51வது பிறந்தநாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பிறந்தநாளில் 'துணிவு' படக்குழுவுக்கு நடிகர் அஜித் கொடுத்த கிஃப்ட்! பிரபல நடிகர் EXCLUSIVE வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Gave Costly Birthday Gift to Thunivu Team

People looking for online information on Ajith Kumar, AK, Thunivu will find this news story useful.