இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிகரித்து வரும் நிலையில் பலரும் அச்சத்தில் இருந்திருக்கின்றனர்.
மக்கள் அனைவரும் முறையான மருத்துவமனை சிகிச்சை மற்றும் ஆக்ஸிஜன் கிடைக்கப் பெற வேண்டி மருத்துவமனைகளை நாடி வருகின்றனர். அரசும் பல்வேறு வழிகளில் கொரோனாவை கட்டுப்படுத்த முயன்று வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதனிடையே பொது மக்களுக்கு கொரோனாவை எதிர்ப்பதற்கான போதிய தடுப்பு வழிமுறைகளையும் அரசு வழிகாட்டி வருகிறது.
நடிகர் சிவகுமாரின் மகன்களும் நடிகர்களுமான சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தந்தையுடன் சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கொரோனா நிவாரண நிதிக்காக தமிழக அரசின் பொது நிவாரண நிதி திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் வழங்கினர். இதனை தொடர்ந்து தற்போது ரசிகர்களால் தல என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார்கள்.
இது பற்றி செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் தம்முடைய செய்தி குறிப்பில் வெளியிடும்போது, “கொரோனா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டு வருவதற்கும் இந்த பேரிடரை எதிர்கொள்வதற்கும் தமிழ்நாடு அரசு கூடுதலான நிதி ஆதாரங்களை செலவிட வேண்டிய தேவை உள்ளது.
எனவே அரசின் முனைப்பான முயற்சிகளுக்கு நமது சமுதாயத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்களால் இயன்ற வகையில் உதவிட முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கிட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார். அந்த வேண்டுகோளுக்கு ஏற்ப திரைப்பட நடிகர் திரு.அஜித் குமார் அவர்கள் கொரோனா நிவாரணப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு RTGS மூலமாக 25 லட்சம் ரூபாய் வழங்கினார்!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ALSO READ: தொடரும் சோகம்! பிரபல டிவி சீரியல் நடிகரின் திடீர் மரணம்.. கலக்கத்தில் சின்னத்திரை உலகம்!