சென்னை: இயக்குனர் சிறுத்தை சிவா வீரம், விஸ்வாசம் படங்களின் ஆண்டு விழாவை முன்னிட்டு டிவீட் செய்துள்ளார்.
நடிகர் அஜித்திற்கு மிக முக்கியமான வீரம், வேதாளம், விஸ்வாசம் போன்ற பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சிவா. 2011 காலகட்டத்தில் மங்காத்தா படத்திற்கு பிறகு விஜயா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் படம் பண்ணுவதற்காக அஜித் ஒப்பந்தமானார். பில்லா 2, ஆரம்பம் படங்களை முடித்துக்கொண்டு விஜயா புரொடக்ஷன்ஸ் படத்தில் நடிக்க ஆயத்தமானார். அஜித்தும் அப்போதுதான் ஆரம்பம் படத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் காலில் அறுவை சிகிச்சை முடித்துக் கொண்டு இருந்த நேரம். மூன்று வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட ஒப்பந்தம் என்பதால் படத்தை விரைவாக முடிக்கவும் படத்தை வெற்றிப்படமாக ஆக்கவும் அஜித் குறிக்கோளாக இருந்தார்.
அப்போது அஜித் ஒரு வார பத்திரிகையில் பேட்டி அளித்திருந்தார்.அதில் "நான் வளரும் காலக்கட்டத்தில் விஜயா, ஏவிஎம், சத்யஜோதி போன்ற பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் என்னை வைத்து எப்போது படம் பண்ணுவார்கள் என்று ஆவலோடு இருப்பேன். அதற்கான காலகட்டம் இது தான்" என்று பேட்டி கொடுத்துள்ளார். அந்த அளவிற்கு விஜயா புரோடக்சன்ஸ் மீது அஜித் மரியாதை வைத்திருந்தார். விஜயா புரொடக்ஷன்ஸின் நிறுவனர் நாகி ரெட்டியின் 100வது ஆண்டு விழாவை முன்னிட்டு வீரம் படம் தயாரானது.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அஜித் எப்பொழுதும் ஒரு படத்தை முடித்த பின்னரே இன்னொரு படத்தை ஆரம்பிப்பார். வீரம் படம் மட்டும் இதில் விதிவிலக்கு. ஆரம்பம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்து பேட்ச் ஒர்க் போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. முதலில் அஜித் இல்லாத காட்சிகளை படமாக்கி பின்னர் அஜித்தின் 45 நாள் கால்ஷீட்டில் மொத்த படத்தையும் முடித்துவிட்டார்.
"பலி ஆடாக இருந்து உயிர் பிழைத்துள்ளேன்" - பரபர அறிக்கை விட்ட பாவனா!
2013 தீபாவளிக்கு ஆரம்பம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடுத்த 70 நாட்களில் 2014 பொங்கலுக்கு வீரம் வெளியாகி மெகா ஹிட். 2014 ஆம் ஆண்டு வெளிவந்த படங்களில் அதிக வசூலை குவித்த படங்களில் பட்டியலை இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சகம் 2015 ம் ஆண்டு கேன்ஸ் பட விழாவில் வெளியிட்டது. அதில் தமிழக சினிமாவில் அந்த ஆண்டு அதிகம் வசூல் செய்த திரைப்படங்களின் வரிசையில் முதலிடம் லிங்கா விற்கும் இரண்டாவது இடம் வீரம் திரைப்படத்திற்கும் மூன்றாவது இடம் கத்தி திரைப்படத்திற்கு அளிக்கப்பட்டது.
அதே போல் அஜித் சிவா கூட்டணி நான்காவது முறையாக விஸ்வாசம் படத்தில் இணைந்தது. 2019 பொங்கலுக்கு ரிலீஸ் ஆன விஸ்வாசம் தமிழ் சினிமாவின் இண்டஸ்ட்ரி ஹிட் ஆனது. பாகுபலிக்கு அடுத்து அதிக வசூல் செய்த திரைப்படமாக தமிழகத்தில் விஸ்வாசம் அமைந்தது.
சாய்னா நேவாலை பாலியல் ரீதியாக திட்டிய நடிகர் சித்தார்த்? வலுக்கும் கண்டனங்கள்...
இன்றுடன் வீரம் படம் வெளியாகி 8 வருடமும், விஸ்வாசம் படம் வெளியாகி 3 வருடமும் ஆகின்றது. இச்சூழலில் இயக்குனர் சிவா தனது டிவிட்டர் பக்கத்தில் டிவீட் செய்து, நடிகர் அஜித், அஜித் ரசிகர்கள், படக்குழுவினர், படத்தயாரிப்பு நிறுவனங்கள், ஊடகங்கள், குடும்ப பட ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றி கூறியுள்ளார்.