நடிகர் அஜித்குமார்- H.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் படம் 'துணிவு'.
Also Read | சாமி சரணம் ஐயப்பா... சபரிமலை யாத்திரை போகும் ‘துணிவு’ இயக்குநர் H.வினோத் ... வைரல் வீடியோ
பொங்கலை முன்னிட்டு நேற்று முன்தினம் (11.01.2023) துணிவு படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதிகாலை 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சி தமிழகமெங்கும் திரையிடப்பட்டது.
துணிவு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்த படத்தின் சேட்டிலைட் டிவி ஒளிபரப்பு உரிமத்தை கலைஞர் தொலைக்காட்சி கைப்பற்றி உள்ளது. ஓடிடி ஒளிபரப்பு உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
'துணிவு' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார், கலை இயக்குனராக மிலன் பணிபுரிந்துள்ளார், இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிந்துள்ளார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டியும் சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தரும் வடிவமைப்பு செய்துள்ளனர்.
நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
துணிவு படம் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் துணிவு படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சியில் நடிகர் அஜித் நடித்த பில்லா படத்தின் Reference இடம் பெற்றுள்ளது. துணிவு படத்தில் இடம்பெற்ற கேங்ஸ்டா பாடலில், அஜித் கதாபாத்திரத்தின் முந்தைய வாழ்க்கை குறித்த காட்சியில் அஜித்தின் பெயர், டேவிட் பில்லா என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க பாஸ்போர்ட்டும் தேதியுடன் அதில் காட்டப்படுகிறது. இன்னொரு பெயராக அப்துல்லா என்ற பெயரிலும் அஜித் சம்பந்தப்பட்ட தகவல் அந்த காட்சியில் இடம் பெற்றுள்ளது. அப்துல்லா என்பது சிட்டிசன் படத்தில் அஜித் நடித்த கதாப்பாத்திரம் ஆகும்.
Also Read | அடடே.. அஜித், மஞ்சு வாரியர் கிட்ட ஏதோ சொல்றாப்ல .. வைரலாகும் துணிவு BTS கிளிக்ஸ்.!