தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.
துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
நடிகர் அஜித்குமார் அடுத்ததாக லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் குமாரின் தந்தை சுப்ரமணியம் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை சென்னையில் நடிகர் அஜித் குமார் இல்லத்தில் காலமானார். அவருடைய மறைவுக்கு தமிழக அரசின் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், சசிகலா, விஜயபாஸ்கர், விஜய் வசந்த், நடிகர் ஜி எம் சுந்தர், நடிகை சாக்ஷி அகர்வால், நடிகர் சிவா ஆகியோர் அறிக்கை வெளியிட்டு இரங்கல் தெரிவித்துள்ளனர். அஜித்குமார் தந்தையார் பி.எஸ்.மணியின் இறுதி சடங்கு பெசண்ட் நகர் மின்மயானத்தில் நடைபெற்றது.
இறுதிச் சடங்கில் நடிகர் அஜித் குமார், நடிகை ஷாலினி அஜித்குமார், நடிகர் ரிச்சர்ட் ரிஷி, நடிகர் சிவா உள்ளிட்ட அஜித்குமாரின் உறவினர்கள் கலந்து கொண்டனர். மேலும் சுரேஷ் சந்திரா, அனு வர்தன், மருத்துவர் விஜய் ஷங்கர், நடிகர் சிவகார்த்திகேயன் மனைவி ஆர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நடிகர் அஜித் குமார், தனது தந்தையின் இறுதிச்சடங்கில் அழுத வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் உருக்கமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தமது தாயார் மோகினியை தேற்றி ஆறுதல் கூறும் காட்சிகளும் வீடியோவில் பதிவாகி உள்ளன.