ஐரோப்பா பைக் சவாரி.. பிரிட்டன்ல இருந்து இந்த நாட்டுக்கு பைக் ரைடு போன அஜித்! வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐரோப்பாவில் நடிகர் அஜித் பைக் பயணம் மேற்கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | திருமணத்துக்கு பின் விக்கி - நயன் முதல் வெளிநாட்டு பயணம்.. எந்த நாட்டுக்கு போயிருக்காங்க?

அஜித் தனது திரைப்பட படப்பிடிப்பு இல்லாத சமயங்களில் பைக்கை எடுத்துக்கொண்டு ரோட் ட்ரிப் போவது வாடிக்கையான ஒன்று. அது போல் தனது BMW  பைக்கை எடுத்துக்கொண்டு தல அஜித் பயணம் மேற்கொள்வது போன்ற புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தின் நண்பரும், சக பைக் ரைடருமான சுப்ரஜ் வெங்கட் டிவிட்டரில் இந்த புகைப்படங்களை வெளியிட்டார். ஐரோப்பா நாடுகளில் இந்த பைக் சுற்றுப்பயணம் தற்போது நடந்து வருகிறது. இங்கிலாந்தில் தொடங்கிய சுற்றுப்பயணம் தற்போது பெல்ஜியம் நாட்டில் தொடர்ந்து வருகிறது. பெல்ஜியம் நகர வீதிகளில் எடுத்த இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. Schengen விசாவுக்கு உட்பட்ட 26 ஐரோப்பிய நாடுகளில் இந்த பைக் பயணம் நிக்ழ உள்ளது.

நேர்கோண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் திட்டம் ஒரு ஆண்டுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டது. வலிமை படத்தை தொடர்ந்து அஜித்குமாரின் 61வது படம் துவங்கி உள்ளது.

AK61 படத்திற்காக 47 நாட்கள் தொடர்ச்சியாக ஐத்ராபாத்தில் படக்குழு படப்பிடிப்பு நடத்தி உள்ளனர். முதல் கட்ட படப்பிடிப்பு ஐத்ராபாத்தில் நிறைவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புனேயில் ஜூன் 15ஆம் தேதி முதல் துவங்குகி உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Also Read | மிதாலி ராஜின் BIO PIC படம்.. டாப்சி நடிப்பில் வெளியான தெறிக்கும் டிரெய்லர்! பட ரிலீஸ் எப்போ?

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Bike Tour Belgium Photos went Viral on social media

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Bike Tour Belgium, AK61 will find this news story useful.