பேங்காக் நகரில் அஜித்குமார்.. 20 லட்ச ரூபாய் சூப்பர் பைக்கில் சுற்றுப்பயணம்.. வைரல் ஃபோட்டோஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தாய்லாந்து நாட்டில் நடிகர் அஜித் குமார் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | AK62: "அமைதிக்கு முன் புயல்".. அஜித்குமாரின் புகைப்படத்தை பகிர்ந்து விக்னேஷ் சிவன் வைரல் பதிவு!

நடிகர் அஜித் ஐரோப்பிய நாடுகளில் சில நாட்களுக்கு முன் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.  ஐரோப்பிய பைக் சுற்றுப்பயணத்துக்கு பின் நடிகர் அஜித்,  AK61 படத்தின் விசாகப்பட்டினம் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

பின்னர் நடிகர் அஜித், விசாகப்பட்டினம் படப்பிடிப்பை நிறைவு செய்து, தனது நண்பர்களுடன் இமயமலையில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

இமாச்சலப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள மணாலி, ரோதாங் பகுதியில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

பின்னர் நடிகர் அஜித், தனது நண்பர்களுடன் ஜம்மு காஷ்மீரில் உள்ள லடாக் & லே பகுதியில்  பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இந்த பயணத்தில் ரிஷிகேஷ், கேதர்நாத், பத்ரிநாத் கோயிலில் நடிகர் அஜித்குமார் சாமி தரிசனம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

பின்னர் பைக் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு நடிகர் அஜித் குமார் துணிவு படத்தின் படப்பிடிப்புக்கு தாய்லாந்து நாட்டின் பேங்காக் நகருக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் பேங்காக் படப்பிடிப்பை நிறைவு செய்து நடிகர் அஜித் குமார் பேங்காக் நகரில் பைக் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பான புகைப்படங்களை சுரேஷ் சந்திராவின் டி ஒன் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

அஜித் இந்த சுற்றுப்பயணத்தில் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள BMW R 1200 GS பைக்கில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

 

Also Read | இந்த வாரம் OTT-க்களில் ரிலீசாகும் திரைப்படங்கள் & வெப்-சீரிஸ்கள்.. ஒரு பார்வை!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar Bike Ride in Thailand Bangkok with BMW R 1200 GS

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar Bike Ride, BMW R 1200 GS, Thailand Bangkok will find this news story useful.