தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது.

Also Read | "இந்தா வந்துருச்சுல".. விஐய் நடிப்பில் வாரிசு!.. வெளியான சென்சார் அப்டேட்!!
நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இயக்குனர் H வினோத்துடன் துணிவு திரைப்படம் மூலம் இணைந்துள்ளார் நடிகர் அஜித். அதே போல, இந்த மூன்று படங்களையும் பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் நடிகர் அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கென், வீரா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். மிகப் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் துணிவு படத்தின் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளியாகி, படத்தின் ரிலீஸ் மீதான காத்திருப்பை இன்னும் பல மடங்கு அதிகரிக்க வைத்துள்ளது. நிறைய சாதனைகளையும் இந்த ட்ரைலர் யூ டியூப் தளத்தில் படைத்து வருகிறது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைய உள்ள திரைப்படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
போடா போடி, நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி உள்ளவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். இதற்கிடையே, துணிவு படத்தை அடுத்து நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் AK62 படத்தை தயாரிக்கிறார். துணிவு திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வரும் சூழலில், அஜித் மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணைய உள்ள திரைப்படம் குறித்தும் அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். அப்படி ஒரு சூழலில் தான் AK 62 திரைப்படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரத்தில் இருந்து பிரத்யேக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதன்படி, இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜனவரி 17 ஆம் தேதியன்று ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இதுகுறித்த தகவல் வைரலாகி வரும் சூழலில், ரசிகர்களும் தற்போது உற்சாகம் அடைந்துள்ளனர்.
Also Read | புத்தாண்டு ஸ்பெஷலாக நண்பர் விஜயகாந்த்-ஐ பாக்க ஓடி வந்த சத்யராஜ்.. மனம் நெகிழ வைத்த சம்பவம்