அஜித் குமார், ஷாலினி.. புனித் ராஜ்குமாரின் மறைவுக்கு இரங்கல்.. உருக்கமான அறிக்கை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் உயிரிழந்துள்ளதை அடுத்து அவருக்கு நடிகர் அஜித் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ajith kumar and shalini condolence for puneeth rajkumar demise
Advertising
>
Advertising

கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மகனும், சிவராஜ்குமாரின் தம்பியுமான புனித் ராஜ்குமார், தமது 46வது வயதில் உயிரிழந்துள்ளார். தேசிய விருது, மாநில விருது, என பல விருதுகளை பெற்றுள்ள புனித் ராஜ்குமார், அண்மையில் ஜேம்ஸ் என்கிற ஆக்‌ஷன் படத்தில் நடித்து வந்தார்.

ajith kumar and shalini condolence for puneeth rajkumar demise

பஜரங்கி-2 பட விழாவில் கடைசியாக கலந்த புனித் ராஜ்குமார், தற்போது மாரடைப்பு ஏற்பட்டு, பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சைப் பலனின்றி மாரடைப்பால் உயிரிழந்தார்.

ajith kumar and shalini condolence for puneeth rajkumar demise

இவருடைய மறைவுக்கு, பலதரப்பட்ட திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் அஜித் குமார் மற்றும் ஷாலினி அஜித் குமார், “ஸ்ரீ புனித் குமார்ஜியின் துரதிர்ஷ்டவசமான மறைவைக் கேட்டு வருந்துகிறேன், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் இந்த துயரத்தை போக்க வலிமை பெறட்டும்.!” என்று தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, புனித் ராஜ்குமார், இறந்த பின் கண் தானம் செய்வதற்கு முன்பே ஒப்புதல் அளித்திருந்ததை அடுத்து, அவரின் கண்கள் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Ajith kumar and shalini condolence for puneeth rajkumar demise

People looking for online information on Ajith Kumar, Ajithkumar, Shalini ajith kumar, Shalini ajithkumar will find this news story useful.