ஹோட்டல் ஊழியர்களுடன் நடிகர் அஜித்.. இணையத்தை கலக்கும் செம வைரல் ஃபோட்டோ! மனுசன் வேறலெவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக அஜித் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

Advertising
>
Advertising

Also Read | அதர்வா & அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய ஆக்சன் படம்.. மிரட்டலான டீசர் வீடியோ!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத் & சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இச்சூழலில் நடிகர் அஜித் குமார் ஹோட்டல் ஊழியர்களுடன் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. அந்த ஹோட்டல் ஊழியர்கள் ஒவ்வொருவரும் போட்டோ எடுத்துள்ளனர். கடைசியாக அஜித்துடன் இணைந்து குரூப் போட்டோவும் எடுத்துள்ளனர். ஐரோப்பிய சுற்றுப்பயணம் & திருச்சி ரைஃபிள் கிளப் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு பிறகு அஜித்தின் புகைப்படங்கள் ரசிகர்கள் மூலம் வெளியாகி உள்ளன.

AK61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | அஜித் நடிக்கும் AK61.. படத்தில் இணைந்த பிரபல யூடியூப் நடிகை! வைரல் BTS போட்டோ!

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK with Hotel Workers Viral Photos AK61

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar with His Fans, AK 61, Hotel Workers will find this news story useful.