வெளிநாட்டு கால்பந்து மைதானத்தில் மகனுடன் நடிகர் அஜித்.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான வலம் வருபவர் நடிகர் அஜித்குமார்.

Advertising
>
Advertising

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "30 வயசு ஆகிடுச்சு".. ரன்பீர் கபூருடன் சேர்ந்து தனது பிறந்தநாளை கொண்டாடிய ஆலியா பட்! Birthday Dress மட்டும் இத்தனை லட்ச ரூபாயா?!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் வெற்றிக்கு பிறகு சமீபத்தில் நடிகர் அஜித் நடிப்பில் பல ரசிகர்களின் எதிபார்ப்பிற்கு இடையில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது.

துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. துணிவு படம் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி முதல் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி உள்ளது. மேலும் தியேட்டரை தொடர்ந்து ஓடிடி தளத்திலும் துணிவு படம் பலத்த வரவேற்பைப் பெற்று வருகிறது. உலக அளவிலும் நெட்பிளிக்ஸ் தளத்தில் டிரெண்ட் ஆகி வருகிறது.

Images are subject to © copyright to their respective owners.

சமீபத்தில் நடிகர் அஜித்குமார் லண்டன் பயணத்தை முடித்து விட்டு போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். போர்ச்சுக்கல் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் அஜித் குமாரின் புகைப்படங்களை நடிகை ஷாலினி அஜித்குமார் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார்.

Images are subject to © copyright to their respective owners.

போர்ச்சுக்கல் பயணத்தை முடித்து விட்டு நடிகர் அஜித்  ஐக்கிய ராஜ்யத்தில் உள்ள ஸ்காட்லாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஸ்காட்லாந்து நாட்டின் சாலைகளில் கார் ஓட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகின. 

அடுத்ததாக நடிகர் அஜித், லைக்கா நிறுவனம் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சமீபத்தில் நடிகர் அஜித் குமார், தமது குடும்பத்துடன் துபாயில் சுற்றுலா மேற்கொண்டு வரும் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டன. மேலும் டிவிட்டர் பக்கத்தில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகின.

Images are subject to © copyright to their respective owners.

இந்த நிலையில்   ஆத்விக் உடன் அஜித் & ஷாலினி துபாயில் உள்ள கால்பந்து மைதானத்தில் இருக்கும் புகைப்படத்தை ஷாலினி அஜித்குமார் தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். Football Fun என்ற தலைப்புடன் புகைப்படத்தை ஷாலினி அஜித்குமார் வெளியிட்டுள்ளார்.

Also Read | சர்ப்ரைஸ் பரிசு கொடுத்த ரசிகை.. நடிகை சமந்தாவின் லவ்லி கமெண்ட்.. வைரல் போஸ்ட்..!

வெளிநாட்டு கால்பந்து மைதானத்தில் மகனுடன் நடிகர் அஜித்.. தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஃபோட்டோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK with His Son Advik in Dubai Football Ground

People looking for online information on Ajith Kumar, Ajith Kumar with His Son Advik, Dubai Football Ground will find this news story useful.