விமான நிலையத்தில் அஜித்குமார்.. பேருந்தில் பயணம் செய்த வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக அஜித் நடிப்பில் வலிமை படம் கடந்த பிப்ரவரி மாதம் (24.02.2022) திரையரங்கில் வெளியானது.

Advertising
>
Advertising

Also Read | ஸ்பெயின் நகர வீதிகளில் உலா வரும் நயன்தாரா & விக்னேஷ் சிவன்.. இணையத்தை கலக்கும் செம வீடியோஸ்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளிலும் ரிலீசானது. விமர்சகர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று 200 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து வெற்றி அடைந்தது வலிமை படம்.

வலிமைக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் மூன்றாவது முறையாக இணையும் AK61 படத்தின் படப்பிடிப்பு  நடைபெற்று வருகிறது.  AK 61 படத்தை எச். வினோத் இயக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, போனி கபூர் தயாரிக்கிறார். ஐத்ராபாத் & சென்னையில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்தது.

இச்சூழலில் நடிகர் அஜித் குமார் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டுள்ளன. மேலும் விமான நிலைய பேருந்தில் பயணம் செய்த வீடியோ காட்சியும் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

ஐரோப்பிய சுற்றுப்பயணம் & திருச்சி ரைஃபிள் கிளப் துப்பாக்கி சுடும் போட்டிகளுக்கு பிறகு அஜித்தின் புகைப்படங்கள் ரசிகர்கள் மூலம் தற்போது வெளியாகி உள்ளன.

AK61க்கு பின் நடிகர் அஜித்தின் 62 வது படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ளதாக சில நாட்களுக்கு முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பு அஜித் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரவேற்பை பெற்றது.  அனிருத் இசையில், லைக்கா சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆண்டு மத்தியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | துல்கர் - ராஷ்மிகா மந்தனா நடித்த 'சீதா ராமம்'.. 10 நாள் வசூல் மட்டும் இத்தனை கோடி ரூபாயா?

விமான நிலையத்தில் அஜித்குமார்.. பேருந்தில் பயணம் செய்த வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Ajith Kumar AK with Fans Airport Video Goes Viral

People looking for online information on Airport, Ajith Kumar, Ajith Kumar with Fans will find this news story useful.