நடிகர் அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியாகி ஆல்டைம் ப்ளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘வேதாளம்’.
![Ajith Kumar AK Vedalam Telugu Remake Bhola Shankar Release Date Ajith Kumar AK Vedalam Telugu Remake Bhola Shankar Release Date](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/ajith-kumar-ak-vedalam-telugu-remake-bhola-shankar-release-date-new-home-mob-index.jpeg)
Also Read | ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர்.. படக்குழுவில் இணைந்த "அகண்டா" பட பிரபலம்..! வைரல் ஃபோட்டோ
2015-ம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான இந்த படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருந்தார். அஜித் உடன், லட்சுமி மேனன், ஸ்ருதி ஹாசன், ராகுல் தேவ், கபீர் சிங், சூரி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். வெற்றி ஒளிப்பதிவு செய்து இருந்தார். தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. அஜித் நடித்த கதாபாத்திரத்தில் சிரஞ்சீவி நடிக்கிறார்.ராம பிரம்மம் சுங்கரா தயாரிக்கும் இந்த படம் “போலா சங்கர்” என பெயரிடப்பட்டுள்ளது. சிரஞ்சீவி மற்றும் மெஹர் ரமேஷ் முதன்முறையாக இணைந்துள்ள இந்த மாஸ் ஆக்ஷன் என்டர்டெய்னர் படத்தின் பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி காலை 7:45 மணிக்கு நடைபெற்றது.
இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கியது. மகா சிவராத்திரியை முன்னிட்டு இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. அண்ணன்-தங்கை செண்டிமெண்ட்டை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் சிரஞ்சீவியின் தங்கையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சைரா நரசிம்ம ரெட்டி படத்தை தொடர்ந்து தமன்னா, மெகாஸ்டார் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார்.
கிரியேட்டிவ் கமர்ஷியல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அனில் சுங்கராவின் ஏகே எண்டர்டெயின்மெண்ட்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் சிரஞ்சீவியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது.
இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | Pushpa The Rule: அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா Part 2.. போட்டோக்களுடன் வெளியிட்ட செம அப்டேட்!